Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிதாமகனுக்கு பின் இணைய இருந்த விக்ரம், சூர்யா.. நல்லவேளை கிரேட் எஸ்கேப்

பிதாமகனுக்கு பின் இணைய இருந்த விக்ரம், சூர்யா.. நல்லவேளை கிரேட் எஸ்கேப்

சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இரு நடிகர்கள் சேர்ந்து நடித்தால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால் தற்போது வரை விஜய்-அஜித் இருவரும் […]

சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இரு நடிகர்கள் சேர்ந்து நடித்தால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால் தற்போது வரை விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது உச்ச நடிகர்களாக உள்ள சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்த பிதாமகன் படத்தில் நடித்திருந்தனர். பாலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பிதாமகன் படத்தில் சிறந்த நடிப்பை பாராட்டி விக்ரமுக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.

அதேபோல் சூர்யாவும் இப்படத்தில் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சூர்யா, விக்ரம் இருவருக்குமே பிதாமகன் படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர மிகப்பெரிய உயரத்தை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த இரு நடிகர்களும் 2வது முறையாக இணைய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் இவர்களின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த இரு நடிகர்களுமே மறுத்துள்ளனர். அதாவது வசந்தபாலன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான காவியத்தலைவன் படத்தில் முதலில் சூர்யா மற்றும் விக்ரம் இருவரையும் படக்குழு அணுகியுள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவருமே வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு இவர்கள் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் மற்றும் சித்தார்த் நடித்திருந்தனர். இந்நிலையில் சூர்யா பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது கேமியோ தோற்றத்தில் நடித்து வருகிறார்.

நல்ல விதமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக தோற்று விட்டது என்று தான் கூற வேண்டும். இதனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா மற்றும் விக்ரம் காப்பாற்றப்பட்டார்கள் என்கிறது கோலிவுட் வாட்டாராம். சமீபத்தில் கூட கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ தோற்றத்தில் சூர்யா நடித்து அசத்தியிருந்தார். மேலும் நடிகர் விக்ரமின் படத்திலாவது சூர்யா சிறப்பு தோற்றத்தில் வரவேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.