Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தோல்வி சென்டிமென்ட்டை முறியடிக்குமா மூக்குத்தி அம்மன் 2? சுந்தர்.சி-க்கு காத்திருக்கும் சவால்!

தோல்வி சென்டிமென்ட்டை முறியடிக்குமா மூக்குத்தி அம்மன் 2? சுந்தர்.சி-க்கு காத்திருக்கும் சவால்!

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்போ அல்லது வெளியான பிறகோ, அப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். […]

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்போ அல்லது வெளியான பிறகோ, அப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.

அந்த வகையில், தன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இயக்குநர் சுந்தர் சி சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதுவரை பல முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும் தங்கள் படங்கள் வெளியாவதற்கு முன்பாகத் திருப்பதி சென்று சிறப்பு வழிபாடு செய்து கும்பிட்ட அனைத்துத் படங்களும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியிலேயே முடிந்துள்ளன என்ற ஒரு விசித்திரமான சென்டிமென்ட் இருக்கிறது.

இந்தத் ‘திருப்பதி சென்டிமென்ட்’ மற்றும் அதன் பின்னணியில் உள்ள சினிமா வரலாறு இயக்குநர் சுந்தர் சி-க்குத் தெரியாமல் போய்விட்டதோ என்ற கேள்வியும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளன.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி ஆகிய மூவரின் திரைப் பயணத்திற்கும் மிக முக்கியமான அக்னிப்பரீட்சையாக இருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ இத்தகைய சென்டிமென்ட்களை உடைத்து வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இறுதியில் சென்டிமென்ட்களைத் தாண்டி, சுவாரசியமான திரைக்கதையும் மக்கள் அளிக்கும் வரவேற்புமே படத்தின் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.