Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பீஸ்ட் படம் முடிந்த கையோடு அடுத்த படத்திற்கு கமிட்டான நெல்சன்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி!

பீஸ்ட் படம் முடிந்த கையோடு அடுத்த படத்திற்கு கமிட்டான நெல்சன்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வெளிவர தயாராக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வெளிவர தயாராக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவது என பல இயக்குனர்களின் பெயர்கள் இணையத்தில் வெளியானது.

விக்னேஷ் சிவன், கேஎஸ் ரவிக்குமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் போன்ற முன்னணி இயக்குனர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ரஜினியின் 169 அல்லது 170 வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளாராம்.

ஏற்கனவே பால்கி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இந்தப் படத்தை இளையராஜா தயாரிக்க உள்ளார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் மெர்சலான கூட்டணி பற்றிய தகவல் வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் தளபதி, சூப்பர் ஸ்டார் என அடுத்தடுத்த படங்களிலேயே முன்னணி நடிகர்களை வைத்து இயக்குகிறார். தற்போது ரஜினிகாந்த் 169 என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.