Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதியால் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்

நெல்சனின் டாக்டர் பட வெற்றியைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்போது பீஸ்ட் படத்திற்காக பிரம்மாண்ட விளம்பரங்களை செய்து வருகிறது சன் பிக்சர்ஸ். தளபதியின் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் இந்த சூழ்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் நெல்சன் […]

நெல்சனின் டாக்டர் பட வெற்றியைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்போது பீஸ்ட் படத்திற்காக பிரம்மாண்ட விளம்பரங்களை செய்து வருகிறது சன் பிக்சர்ஸ். தளபதியின் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் இந்த சூழ்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் நெல்சன் இயக்கப் போகும் அடுத்த படத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குகிறார். இந்த படத்தின் அனௌன்ஸ்மென்ட் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியுடன் படத்தை இயக்கப் போவதாக சொல்லும் போது நடிகர் விஜய்யின் ரியாக்சன் எப்படி இருந்தது என்பதைப் பற்றி நெல்சன் திலீப்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இதுகுறித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நெல்சன் திலீப்குமார் தன்னை ரஜினியின் படத்திற்கு கதை எழுத ஊக்கப்படுத்தியது விஜய் சார் தான்.

பீஸ்ட் படப்பிடிப்பின் போது ரஜினி சார் அடுத்த படத்திற்கான கதையை கேட்க ஆரம்பித்துவிட்டார், நீ ஏன் நெல்சா ரஜினி சாருக்கு கதை எழுதக் கூடாது என்று நடிகர் விஜய் என்னிடம் கேள்வி கேட்டார்? அப்போது நான் ஒரு நிமிடம் திகைத்து, ரஜினி சார் ஒரு லெஜன்ட் நான் எப்படி அவருக்கு கதை எழுதுவது என்று தயங்கினேன். அப்போது நீ கதை எழுதி நெல்சா, அப்புறம் எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று எனக்கு ஊக்கமளித்தார்.

அவர் சொன்ன அடுத்த நிமிடத்தில் இருந்தே எனக்குள் இது ஆழமாக பதிய ஆரம்பித்து விட்டது. நான் அதன்பின் கதை எழுத ஆரம்பித்தேன். இப்போது தலைவர் 169 படத்தை இயக்கப் போகிறேன் என்றால் அதற்கு காரணம் விஜய் சார் தான். அவரால் மட்டுமே இது சாத்தியமானது.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய 3 திரைப்படங்களுக்கும் தன் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைத்துள்ளார். அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனும் 3 திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். தற்போது நெல்சனின் நான்காவது படமான தலைவர் 169 திரைப்படத்திற்கும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் காம்போவில் வெளியான செல்லமா, இப்போ எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுடி, ஹலோமத்தி ஹபிபூ போன்ற பாடல்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.