வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தளபதியை தவிர வேறு யாராலும் பண்ண முடியாது.. புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

தளபதி விஜய்யின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டாக்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பிளாக் காமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

பல முன்னணி இயக்குனர்களும் விஜய்யை வைத்து ஒரு படமாவது எடுத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நெல்சன் மிக எளிதாக விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதுகுறித்து நெல்சன் மிகவும் சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த பீஸ்ட் திரைப்படம் கதையை ரெடி பண்ணும் போதே நடிகர் விஜய் தான் இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று நினைத்து தான் எழுதினேன். அவருக்காக கதையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏனென்றால் இந்த கதைக்கு அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார். ஒரு சில திரைப்படங்களை எடுக்கும் பொழுது சில நடிகர்கள் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் சில கதைகளில் சில நடிகர்கள் நடித்தால் மட்டுமே கதைக்கு உயிர் கொடுக்க முடியும்.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை விஜய் மட்டும் தான் பண்ண முடியும். வேறு ஒரு ஹீரோவால் இந்த கதையில் நிச்சயம் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தற்போது நெல்சன் நடிகர் விஜய்க்கு இவ்வளவு புகழாரம் சூட்டி இருப்பது அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது. இதனால் இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

Trending News