வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மூன்று பார்ட் 2 படங்களை உருவாக்க நெல்சன் போடும் ராஜதந்திரம்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபமா.?

Director Nelson Part 2 Movies: ஜெயிலர் படத்திற்கு முன் நெல்சனை யாரும் கண்டு கொள்ளாமல் ஒரு ஃபெயிலியர் இயக்குனராகவே ட்ரீட் பண்ணினார்கள். ஆனால் இதை எல்லாம் மாற்றி அமைத்து வசூலில் அதிக சாதனை படைத்து தற்போது நாளா பக்கமும் வெற்றி நடை போட்டு வருகிறார் நெல்சன். இதற்கெல்லாம் காரணம் ரஜினியுடன் கூட்டணி வைத்தது தான்.

என்னதான் இவர் ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தாலும் முழுக்க முழுக்க வெற்றி பெற்றதற்கு ரஜினியின் நடிப்புதான் காரணம் என்றே சொல்லலாம். அந்த வகையில் நெல்சனின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது ஜெயிலர் படம். இதனை அடுத்து நெல்சன் புது கதைக்கு போகாமல் ஏற்கனவே வெற்றி பெற்ற 3 படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்.

அதில் ஆரம்பத்தில் சினிமாவிற்கு இயக்குனராக அடி எடுத்து வைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட கோலமாவு கோகிலா படத்தின் பார்ட் 2 எடுக்கப் போகிறார். இந்தப் படத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அதிரடி சண்டை அடாவடித்தனம் போன்ற விஷயங்கள் எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க எதார்த்தமான நடிப்பு கதையை மட்டுமே வைத்து வெற்றி பெற்றார்.

அதுவும் நயன்தாராவின் நடிப்பும், யோகி பாபுவின் நக்கல் கலந்த பேச்சும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. அப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் வரப்போகிறது என்றால் உண்மையிலேயே நயன்தாராவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகத்தான் இருக்கும். அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை மறுபடியும் எடுத்து பெருத்த லாபத்தை பார்க்கலாம் என்று ராஜதந்திரத்தை பயன்படுத்தப் போகிறார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த டாக்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை கொடுக்கும் படமாகவும் வெளிவந்தது. அதனாலயே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று நல்ல வசூலை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ரஜினிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த ஜெயிலர் படத்தின் கதையும் விட்ட குறை தொட்ட குறையாக இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார். ஆனால் ஜெயிலர் படத்தின் கதை மாதிரி மறுபடியும் எடுத்தால் லாபம் கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து அந்த மாதிரியான படங்கள் தான் தற்போது வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நெல்சனுக்கு இந்த படங்கள் மூலம் மறுபடியும் வெற்றி கிடைக்குமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News