Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நெட்ஃபிளிக்ஸ் கொடுக்கும் நெருக்கடி.. தீராத தலைவலியில் கமல்

நெட்ஃபிளிக்ஸ் கொடுக்கும் நெருக்கடி.. தீராத தலைவலியில் கமல்

Kamal : கமல் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்தே அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் கன்னட மொழி குறித்து அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஆனால் மன்னிப்பு […]

Kamal : கமல் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்தே அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் கன்னட மொழி குறித்து அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதில் கமல் உறுதியாக இருந்தார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாததால் பெரிய நஷ்டம் அடைந்தது. இதை அடுத்து தக் லைஃப் படமும் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் இரண்டாவது நாளே தியேட்டர் வெறிச்சோடி காணப்பட்டது. போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கமலுக்கு இப்போது குடைச்சல் தரும் வழியாக ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

கமலுக்கு நெட்ஃபிளிக்ஸ் கொடுக்கும் நெருக்கடி

தக் லைஃப் ரிலீசுக்கு முன்பு டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றிருந்தது. அதாவது கிட்டத்தட்ட 130 கோடி ஒப்பந்தம் செய்திருந்தனர். அதுவும் படம் வெளியான இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் படத்தை வெளியிட வேண்டும் என்று கண்டிஷனும் போட்டிருந்தனர்.

ஆனால் இப்போது ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தக் லைஃப் படம் ஓடிடியில் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இப்போது ஒப்பந்தம் செய்த தொகையில் இருந்து 25 சதவீதம் குறைக்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறதாம்.

இதை படக்குழுவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தக் லைஃப் படத்தால் பெரும் நஷ்டத்தை கமல் சந்தித்து உள்ள நிலையில் டிஜிட்டல் உரிமை மூலம் அதை ஈடு செய்துவிடலாம் என்று நினைத்தார். இப்போது அதிலும் தலைவலியாக அமைந்திருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.