அன்று என்கூட நடிக்கவே தயங்கினார்.. இன்று காலில் விழுந்து வணங்கினேன் – நெப்போலியன்

Nepoleon : நடிகர் நெப்போலியன் அவர்கள் திரைத்துறையில் பிரபலமான ஒரு நடிகர். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலும் பணியாற்றியுள்ளார்.

இவர் அரசியலில் ஈடுபாடும் கொண்டவர், அரசியலில் பொறுப்பிலும் உள்ள ஒரு நடிகர். இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துளார். இவர் நடித்த அத்துணை படங்களும் அதிக அளவில் மக்கள் வரவேற்பை பெற்றன.

இவர் நடிப்பு மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளிலும் மற்றும் வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்க கூடியவர். இவர் உடல் அளவில் உயரம் மட்டுமல்ல மனதளவிலும் உயர்ந்துதான் இன்று வரை நிற்கிறார்.

இன்று காலில் விழுந்து வணங்கினேன்..

இவர் வில்லனாக நடித்து அசத்திய படம்தான் எஜமான். இந்த படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த அவர்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டியதாக இருந்ததாம், ரஜினி அவர்கள் நெப்போலியனுடன் நடிக்க ஒத்துக்கொள்ளவே இல்லயாம்.

ஏனென்றால் அதில் சண்டைக்காட்சிகள் அதிகமா இருக்கும், நெப்போலியன் அவரகள ரஜினியை விட வயது குறைந்தவர் என்பதால் ரஜினிகாந்த் ஒத்துக்கொள்ளவில்லையாம். பிறகு இயக்குனர் r.v.உதயகுமார் அவ்வளவு பேசினத்திற்கு பிறகுதான் ஒத்துக்கொண்டாராம்.

இதற்காக நெப்போலியன் தற்போது அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த அவர்கள் என்கூட நடிக்க தயங்கினார். ஆனால் இன்று நான் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளேன் என்று ரஜினி அவர்களை பெருமையாக பேசியுள்ளார். இருவரும் சந்தித்து கொண்டது மறக்க முடியாத நிகழ்வு என்வும் கூறியுள்ளார்.