Soori : சூரி சமீபகாலமாக வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து வெற்றி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவரது விடுதலை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையை விமலை வைத்து விலங்கு வெப் சீரிஸை இயக்கிய பாண்டியராஜ் சூரிக்கு மாமன் படத்தை கொடுத்து இருக்கிறார்.
இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். தாய்மாமன் உறவு எத்தகைய புனிதமானது என்பது தான் இந்த படத்தின் மையக் கதை. கருவில் இருக்கும் போதே அக்கா மகன் மீது அளவற்ற அன்பை வைக்கிறார் சூரி.
காலை முதல் இரவு தூங்கும் போது வரை சூரியும் அவர் அக்கா மகனும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அவ்வாறு தாலாட்டி, சீராட்டி வளர்க்கும் மருமகனை ஒரு கட்டத்தில் குடும்ப சண்டையால் அவனை பிரியும் நிலைக்கு சூரி தள்ளப்படுகிறார்.
நெகிழ வைக்கும் சூரியின் மாமன் படம்
குடும்ப தகராறில் அக்கா மகனை பிரிந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. எந்தப் பிரச்சினை வந்தாலும் உன்னை நான் பிரிய மாட்டேன் என்ற வாக்கு கொடுத்த நிலையில் குடும்பமே ரெண்டு பட்டதால் மருமகனை சந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் சூரியின் அக்கா மகனும் கதறி அழுகிறான். கடைசியில் மாமன், மருமகன் உறவு இணைந்ததா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பது தான் மாமன் படத்தின் கதை.
சமீபகாலமாக வன்முறை நிறைந்த படங்கள் வெளியாகி மனதையும், மனிதத்தையும் கொன்று வருகிறது. மாமன் படத்தைப் போன்ற நல்ல குடும்பம் சார்ந்த கதையை இயக்குனர்கள் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.