Venkat Prabhu : வெங்கட் பிரபு விஜய்யின் கோட் படத்தை எடுத்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுவது தான் மங்காத்தா.
அஜித்தை வேறு ஒரு தோற்றத்தில் காண்பித்து ரசிகர்களை திக்கு முக்காட செய்திருந்தார். அஜித் படங்களில் ஃபேவரிட் லிஸ்டில் மங்காத்தா படம் கண்டிப்பாக இடம்பெறும். இதனால் ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகம் வருமா என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இது குறித்து வெங்கட் பிரபு மேடையில் பேசிய நிலையில், எல்லோருக்குமே மங்காத்தா 2 வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அஜித் சாருடன் வேறு ஒரு படம் அல்லது மங்காத்தா 2 வில் இணைவேனா என்று இப்போது தனக்கு தெரியவில்லை.
மங்காத்தா 2 படம் வருமா என்பதற்கு வெங்கட் பிரபுவின் பதில்
ஆனால் சென்னை 600028, சரோஜா, கோவா போன்று இளம் பசங்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை நம்பி மங்காத்தா படத்தை கொடுத்த பெரிய ஹீரோ அஜித் சார் தான்.
அதேபோல் தான் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது அவருக்கு குட் பேட் அக்லி படத்திற்கான வாய்ப்பை அஜித் கொடுத்திருக்கிறார் என்று வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.
இதே போல் பல இயக்குனர்கள் இருக்கும் சூழலில் அவர்களின் திறமைக்கு ஏற்ற தூக்கி விடுவதற்காக அஜித் வாய்ப்பு கொடுத்து வருகிறார். ஹெச் வினோத், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் என இந்த வரிசை நீண்டு கொண்டே போகிறது.