ஸ்டூடியோ கிரீன் லைன் அப்பில் 19 படங்களா.? மறைமுகமாக பல ஆயிரம் கோடி முதலீட்டில் சூர்யா

Actor Suriya: இப்போது சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா போன்ற நிறுவனங்கள் அதிகமாக படங்களை தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் இப்போது கிட்டத்தட்ட 19 படங்களை வரிசையாக தயாரிக்க இருக்கிறார். அதுவும் மறைமுகமாக சூர்யா இதில் முதலீடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதாவது சூர்யாவின் நெருங்கிய உறவினர் தான் ஞானவேல் ராஜா. ஆகையால் அவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை கண்டிப்பாக லாபமாக பெறலாம். அந்த வகையில் இப்போது கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என மொத்தமாக 19 படங்களை தயாரிக்கிறார்கள்.

அந்தவகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து விக்ரம் மற்றும் பா. ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் படத்தையும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரித்து வருகிறது. மேலும் கார்த்தி, நலன் ஆகியோரின் கூட்டணியில் வாத்தியாரே என்ற படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.

Also read: 15 வருட பகையை குத்தி கிளறும் சிவக்குமார் குடும்ப ரத்த உறவு.. வெளுத்துப் போன அமீரின் சாயம்

இதை அடுத்து நலன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றொரு படத்தையும் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து ரேபில் என்ற ஜிவி பிரகாஷின் படத்தையும் சூர்யா உடன் இணைந்து ஞானவேல் தயாரிக்கிறார். மேலும் தெலுங்கில் கிட்டத்தட்ட ஒன்பது படங்கள் இவர்களது கைவசம் இருக்கிறது.

அந்த வகையில் நாகார்ஜுனாவின் 95வது படத்தை இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும் ஆனந்த் தேவரகொண்டாவின் டூயட், மேலும் சில ஹீரோக்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர பாலிவுட்டிலும் கிட்டத்தட்ட நான்கு படங்கள் புக் செய்து வைத்திருக்கின்றனர்.

Also read: ஜோதிகாவின் ரீ என்ட்ரியில் விழுந்த கரும்புள்ளி.. விவகாரமான கதையால் அப்செட் ஆன சூர்யா