சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வந்தவர்களில் யார் வென்றவர்கள் என்பதுதான் இங்கு கேள்வியே. இப்படி பல நடிகர் நடிகைகள் பெரிய சப்போர்ட் உடன் வந்தாலும் காணாமல் போயுள்ளனர்.
ஒருசிலர் மட்டும் அத்தி பூத்தாற்போல் வெற்றி பெற்று விடுகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக அசோக் செல்வன் நடிக்கும் படமொன்றில் மூன்று நாயகிகளில் ஒருவராக அந்த கால கதாநாயகி ஒருவரின் மகள் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாகவும் பரபரப்பான நடிகையாக வலம் வந்தவர் ஜீவிதா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வரும் ராஜசேகர் என்பவரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதில் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக சிவானி என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவரை தொடர்ந்து அவரது சகோதரியான சிவிதா என்பவரும் தன்னுடைய 19வது வயதில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் படமே காதல் கலாட்டா உடன் உருவாக உள்ளது. மேலும் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார்.

இதில் தனக்கு எந்த அளவு முக்கியத்துவம் கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என அவரது குடும்பத்தார் பெரிதும் அறிவுறுத்தியுள்ளார்களாம். வழக்கமாக வந்தோமா போனோமா என்று இல்லாமல் ஒரு சிலரை போல இவரும் வாரிசு நடிகையாக சினிமாவில் நிலைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.