சிவாஜியுடன் அதிக முறை ஜோடி போட்ட 2  ஹீரோயின்ஸ்.. போட்டி போட்டு முதல் இடத்தை பிடித்த நடிகை

2 heroines paired with Sivaji Ganesan most times in tamil cinema: தமிழ் சினிமாவின் தன்னிகரில்லாத நடிகராக வாழ்ந்து கலையின் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

குழந்தையிலிருந்து நாடகங்களில் நடித்து வந்ததன் மூலம் பெரும் புகழோடு திரைத்துறையில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானார் சிவாஜி.

அனல் தெறிக்கும் வசனங்களை உணர்ச்சியோடு கூறி இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டங்களை கண்முன் கொண்டு வந்து உணர்ச்சி பெருக்கால் தமிழனை வீறு கொண்டு எழச்செய்த சிவாஜிக்கு நிகர், அவர் மட்டுமே!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி முதலான மொழிகளில் கிட்டத்தட்ட 250 படங்களுக்கும் மேல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பெருமை சிவாஜி சேரும்.

இவர் காலத்தில் பெரும்பாலான படங்களில் இவருடன் ஜோடி போட்டு நடித்த இரு நடிகைகளை காணலாம்,

கிளாசிக் காலகட்டத்தில் சிவாஜி, பத்மினி ஜோடி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றே கூறலாம்.

நடைமுறை வாழ்வில் ஒரு ஜோடியை உதாரணத்திற்கு கூறுவது என்றால் கூட சிவாஜி மற்றும் பத்மினியை அடையாளம் காட்டினர் ரசிகர்கள்.

சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜியின் பராசக்தி படத்திற்கு முன்பே பணம் என்கின்ற படத்தில் சிவாஜி மற்றும் பத்மினி இணைந்து நடித்திருந்தனர்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் பராசக்தி முதலில் வெளிவந்து சிவாஜியின் முதல் படம் என்ற பெருமையை தட்டி சென்றது.

சிவாஜி மற்றும் பத்மினி இருவரும் தில்லானா மோகனாம்பாள்,  தங்கப்பதுமை, திருமால் பெருமை, வியட்நாம் வீடு உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து கலை சேவை புரிந்தனர். 

அன்றைய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவாஜி மற்றும் பத்மினியின் கெமிஸ்ட்ரி தாறுமாறாக  வொர்க் அவுட் ஆகியது. அதுமட்டுமல்லாமல்  அன்றைய பத்திரிகைகளில் பலமுறை கிசுகிசுக்கப்பட்ட ஜோடி சிவாஜி மற்றும் பத்மினி தான். 

சிவாஜி உடன் அதிக முறை ஜோடி சேர்ந்த கே ஆர் விஜயா 

புன்னகை அரசி என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கே ஆர் விஜயா, தங்கப்பதக்கம், திரிசூலம், சொர்க்கம், பாரத விலாஸ் போன்ற,

கிட்டத்தட்ட 40-க்கும் மேலான படங்களில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்து அதிக படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்த பெருமையை தட்டி சென்றார்.  

படங்களில் நடிக்கும் போது சிவாஜிக்கு இணையாக ஈடு கொடுத்து நடிக்க முடியாமல் திணறும்போது,

சிவாஜி முன்னணி நடிகர் என்ற கர்வம் அல்லாமல் கே ஆர் விஜயாவிற்கு டயலாக் டெலிவரி செய்ய கற்றுக் கொடுப்பாராம் இதை கே.ஆர். விஜயா பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். 

Leave a Comment