சங்கினு அடைமொழியோடு சுற்றி திரியும் 20 ஹீரோக்கள்.. டாப்ல ரஜினி, வெளிச்சம் போட்டு காட்டிய ப்ளூ சட்டை

20 heroes epithet of Sangis: குறிப்பிட்ட மதத்திற்கும், குறிப்பிட்ட அரசியலுக்கும் சப்போர்ட் செய்பவர்களை தற்போது கிண்டல் அடிக்கும் விதமாக சங்கீ என்று அடைமொழி வைத்து குறிப்பிடுகிறார்கள். அதிலும் சினிமா பிரபலங்களை குறி வைக்கும் விதமாக இவர்கள் சங்கீ இனத்தை சேர்ந்தவர்கள் என்று பலரும் அவர்களுக்கு ஒரு அடைமொழி கொடுத்து விட்டார்கள்.

தற்போது இந்த சங்கீ அடைமொழியோடு சுற்றித் திரியும் 20 ஹீரோக்களின் லிஸ்ட்டை இணையத்தில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் ப்ளூ சட்டை. அவர்கள் யாரெல்லாம் என்று தற்போது பார்க்கலாம். எப்படி முன்னணி ஹீரோவாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக முதலிடத்தில் ரஜினி ஜொலிக்கிறாரோ, அதேபோல சங்கீனு சொல்லக்கூடிய விஷயத்திலும் டாப்பில் தான் இருக்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்த அயோத்தி கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் முதல் ஆளாக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு இவரால் முடிந்தவரை சப்போட்டும் செய்து இருக்கிறார். இவரைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், அர்ஜுன் மற்றும் சமுத்திரக்கனி அவர்களும் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இவர்களைப் போலவே விஷால், செல்வராகவன், விஷ்ணு விஷால், சந்தானம், தம்பி ராமையா, கௌதம் மேனன், நடராஜ்(நட்டி), கே பாக்யராஜ், கஸ்தூரிராஜா, பி வாசு, கே எஸ் ரவிக்குமார், பிரபு, ராம்குமார்(சிவாஜி மகன்), மணிரத்தினம், மாதவன் மற்றும் யோகி பாபு இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட மதத்தை மட்டும் தூக்கிக் கொண்டாடி இவர்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இந்த மதத்தில் சேர்ந்தவர்கள் அனைவருமே சில குறிப்பிட்ட அரசியலுக்கும் சப்போர்ட் செய்து அவர்களுடைய ஒற்றுமையான இனத்தை காட்டி சங்கீ என்று அடையாளத்துடன் சுற்றித் திரிகிறார்கள் என்று ப்ளூ சட்டை இவர்களைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.