வந்துட்டான்யா வந்துட்டான், 200 சதவீதம் கம்பேக் கொடுத்த வடிவேலு.. சுந்தர் சியால் பறந்து போன பஞ்சம்

18 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். இன்று வெளியான கேங்கர்ஸ் படத்தில் 100 அல்ல 200 சதவீதம் கம்பேக் கொடுத்துள்ளார் வடிவேலு. வழக்கமான தன் பாணியில் மொத்த தியேட்டரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார் சுந்தர் சி

கடைசியாக இவர்கள் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரெண்டு படத்தின் இணைந்து நடித்தார்கள் அதன் பின்னர் 18 வருடங்கள் இந்த கூட்டணி சேரவில்லை. தமிழ் சினிமாவில் வடிவேலு இல்லாத வறட்சி நீண்ட காலமாகவே தெரிந்தது. பல பேர் காமெடி பண்ணினாலும் வடிவேலு அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம்.

ஸ்டைல் பாண்டி, கைப்புள்ள, நாய் சேகர் வரிசையில், கேங்கர்ஸ் சிங்காரமும் இணைந்து விட்டார். இந்த படத்தில் சரவணன் மற்றும் சிங்காரமாக வரும் சுந்தர் சி, வடிவேலு வருகின்ற காட்சியில் மொத்த தியேட்டரும் அல்லோலபடுகிறதாம் அந்த அளவிற்கு இவர்கள் கூட்டணி பழைய மாதிரி அமைந்துள்ளதாம். தமிழ் சினிமாவில் இனிமேல் காமெடிக்கு பஞ்சம் இல்லை, வடிவேலு மீண்டும் வந்து விட்டார் என படம் பார்த்தவர்கள் கொண்டாடி வருகிறார்களாம்.

ஒரு ஸ்கூலில் இரண்டு பி டி மாஸ்டர்கள். ஒன்று வடிவேலு மற்றொன்று சுந்தர் சி. அந்த ஸ்கூலில் சில கிரைம் நடப்பதால் பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் கேத்தரினா தெரேசா போலீசை வரவழைக்கிறார். அந்த காவலரும் ஸ்கூலில் இவர்களோடு சேர்ந்து ஒரு அங்கமாய் கண்காணிக்கிறார். அவர் யார் என்பது தான் கதையில் முக்கியமான ஒன்று.

படத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. வடிவேலுவுடன் “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் “ படத்தில் நடித்த பக்ஸ்ஸும் பெண் வேடமிட்டு வருகிறாராம். இவர்களுடன் படத்தின் வில்லன் ஹரிஷ் பெரடியும் ( விக்ரம் வேதா பட வில்லன் சேட்டா) நன்றாக காமெடி பண்ணி இருக்கிறாராம்.