2023 பெஸ்ட் 6 பீல் குட் மூவிஸ்.. விருதுகளை அள்ளி குவித்த கூழாங்கல்

2023 Feel Good Movies in tamil cinema: தமிழ் சினிமாவில்  முன்னணி ஹீரோக்கள்,  பெரிய பட்ஜெட் படங்கள், காதை கிழிக்கும் அதிரடி ஆக்சன் இவையே வெற்றி என்று இருக்கும்போது சத்தம் இல்லாமல் வந்து திரைக்கதையுடன் மக்களை உணர்வு பூர்வமாக ஒன்றிணைத்து பீல் குட்  மூவியாக விளங்கிய ஆறு படங்களை பற்றி காணலாம்.

திருச்சிற்றம்பலம்: மித்ரன் கே ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா போன்றோர் நடித்திருந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். ஃபுட் டெலிவரி பாய்யாக தனுஷ் காதல், நட்பு இரண்டையும் அழகாக கையாண்டு வாழ்வின் எதார்த்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக ஷோபாவாக நித்யா மேனன் கேரக்டர் நாயகனுக்கு மட்டுமின்றி படத்திற்கும் பக்கபலமாக இருந்து படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார்.

அயோத்தி: “ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போனது இன்று” என்ற ஒற்றை வரியின் மூலம் படத்தின் மொத்த திரைக்கதையும் விளக்கி மனிதத்தை மனிதன் உணர வைத்திருந்தார். படத்தில் நடித்த சிறு கேரக்டரும் நிறைவாக இருந்து மக்களுக்கு படத்தின் உணர்வை கடத்தி இருந்தனர். இயக்குனர் எதற்காக ஆசைப்பட்டாரோ அதை இனிதே அடைந்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. படம் பார்த்த அனைவருக்கும் கண்ணீருடன் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது அயோத்தி.

குட் நைட்: “அன்பானவர்கள் பெரிதாக தெரியும்போது அவர்களின் குறை பெரிதாக தெரிவதில்லை” என்ற கருப்பொருளைத் தாங்கி, குறட்டை என்கிற பிரச்சனையை ஒன்றும் இல்லாமல் செய்திருந்தார் விநாயக் சந்திரசேகர். மணிகண்டன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக் பகவதி பெருமாள் பாலாஜி சக்திவேல்  போன்ற கைத்தேர்ந்த நடிகர்களின் நடிப்பில் முழு நீள நகைச்சுவை மற்றும் உணர்வு பூர்வமான படமாக அமைந்தது குட் நைட்

இறுகப்பற்று: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,ஷரத்தாஎன முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டாலும், நகைச்சுவை உடன் அதற்கான தீர்வை எளிய முறையில் கையாண்டது இப்படத்தின் வெற்றி. சோகத்தை மறைக்காமல் உணர்வு பூர்வமான வசனங்கள் மூலம் பார்வையாளர்களை இறுகப் பற்றியது இத்திரைப்படம்.

கூழாங்கல்: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கியிருந்தார்படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும் பார்க்கும் அனைவருக்கும் சிலிப்பை ஏற்படுத்திய திரைப்படம் கூழாங்கல். வறண்ட நிலம், வறுமையில் வாடும் மக்கள், வாழ்க்கை முறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கான தீர்வு என சோகத்துடன் கூறாமல் நகைச்சுவையுடன் தந்து சபாஷ் போட வைத்திருக்கிறார் கூழாங்கல் இயக்குனர். பல சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்ததுடன் ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டது கூழாங்கல்.

கிடா: ரா வெங்கட் இயக்கத்தில்  ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன் நடித்த திரைப்படம் கிடா.   தன் பேரனுக்கு தீபாவளி கொண்டாட அன்புடன் வளர்த்த கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை விற்க சம்மதிக்கிறார் தாத்தா. தன் உயிருக்கு உயிராய் நேசித்த கிடாவை காப்பாற்றும் சிறுவனின் உணர்வுபூர்வமான போராட்டமே திரைப்படம்.