சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். சினிமாவுக்கு வரும் புதிய நடிகைகள் பலரும் அவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் பிரதான கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ் தான்.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து கிட்டத்தட்ட ஆறு படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. அதில் தற்போது ஹைதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள திரைப்படம் கார்த்திக் நரேன் இயக்கும் D43. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷின் பிறந்தநாளன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
தனுஷுடன் நடிக்கும் இளம் நடிகைகள் பலருக்கும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் தனுஷுடன் ஒரு படம் நடித்து விட்டால் தமிழ் சினிமாவில் நம்முடைய லைப் செட்டில் என முடிவு எடுத்துள்ளார் இளம் நடிகை.
சமீபத்தில் ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் வெளியாகி படுபயங்கர வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படமான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் துஷாரா விஜயன்.

23 வயதான இவர் தனுஷுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும், அதுதான் என் வாழ்நாள் கனவு என தெரிவித்துள்ளார். இப்படித்தான் மாஸ்டர் படம் வெளியான பிறகு மாளவிகா மோகனன் தனுஷ் உடன் நடிப்பது கனவு என்று கூறியதால் தனுஷ் D43 வாய்ப்பு கொடுத்தார் என்பதும் கூடுதல் தகவல். அந்த வரிசையில் துஷாரா விஜயனுக்கும் வாய்ப்பு தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
