உடல் ஒத்துழைக்காததால் 25 கோடி நஷ்டம்.. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சமந்தா

எப்பேர்ப்பட்டவர்களுக்கும் வலி, வேதனை எல்லாம் நேரம் காலம் பார்த்து வருவதில்லை. அதிலும் சமந்தா விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் டாப் கீரில் சென்று கொண்டிருக்கும் போது அவருடைய உடல்நிலை தற்போது ஒத்துழைக்காமல் போனது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும் உடல் குன்றிய நிலையிலும் போட்டி போட்டுக் கொண்டு யசோதா படத்தில் நடித்து 50 கோடி வசூலில் ஈட்டியது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி இருக்கும் சமந்தாவின் சகுந்தலம் படத்திற்கான பிரமோஷனிலும் கலந்து கொண்டு எலும்பும் தோலுமாய் ரசிகர்களுக்கு காட்சியளித்தார்.

இப்படி இவர் சினிமாவை விட்டு விலகக் கூடாது என போராடி வரும் நிலையில் சமந்தாவின் உடல் பிரச்சனையினால் பல கோடி இழந்த பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது சமந்தா தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

உடல் நல பிரச்சனையினால் இரண்டு மாதங்களாக சிகிச்சையில் இருக்கும் சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.  கூடிய விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் 12க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை நடிக்க முடியாமல் தவிர்த்து உள்ளார்.

இதனால் அவருக்கு 25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. அதைத் தாண்டி தற்போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களிலும் சமந்தா கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த பட வாய்ப்புகளும் தற்போது சமந்தாவிற்கு கிடைக்காமல் வேறு நடிகைகளின் பக்கம் திரும்புகிறது.

இந்த சூழலில் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் விரும்புகின்றனர். ஏனென்றால் தற்போது வெளியாகும் செய்திகளை எல்லாம் கேட்கும் போது ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று பயத்தில் இருந்து வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி மீண்டு வருவார் என பல பிரபலங்கள் காத்திருக்கின்றனர்.