28 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு தேடிவந்த மிகப்பெரிய பதவி.. கால் தூசிக்கு சமம் என துச்சமாக நினைத்த காரணம்

Actor Rajini: ரஜினி எந்தளவுக்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கிறாரோ அதே மாதிரி அரசியலிலும் நுழைந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது இவரின் ஆசை என்ற சொல்வதை விட, இவருடைய ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன் என்று உத்திரவாதம் கொடுத்திருந்தார்.

இதை நம்பி ரசிகர்கள் இருந்த நிலையில் அவர்களை ஏமாற்றும் விதமாக எனக்கு அரசியல் ஒத்து வராது என்று முடிவெடுத்து, இனி நான் அரசியலில் வரமாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டார். இந்த முடிவை 28 வருடங்களுக்கு முன்பே அவருடைய படத்தின் மூலம் வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டார்.

அதாவது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அருணாச்சலம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் 3000 கோடியை விசுவிடம் கொடுத்து நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி எனக்கு அமைதி ரொம்பவே முக்கியம் அதனால் எனக்கு இந்த விவாகரமே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவார்.

இதைத்தான் இவருடைய நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறார். அப்படி பார்த்தால் 1996 ஆம் ஆண்டு இவரைத் தேடி மகுடம் சூடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. ஏனென்றால் அப்போது இவருக்கு இருந்த செல்வாக்கை எவராலும் மறுத்திருக்க முடியாது.

ஆனால் அதெல்லாம் வேண்டாம் என்று எட்டி உதைக்கவும் இல்லை, அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் தான் ரஜினிகாந்த். அவருக்குப் பேரும் புகழும் எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோல அமைதியான மனசுக்கு இதமான ஒரு வாழ்க்கையும் வேண்டும் என்று நினைத்து இவருக்கு தேடி வந்த வாய்ப்பை கால் தூசிக்கு சமம் என துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விட்டார்.

அதனால் தான் ஆரம்பத்தில் இருந்து அரசியலுக்கு வர வேண்டாம் என்ற முடிவோடு இருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இறங்கலாம் என்று நினைத்த பொழுது, வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்ததும் அவருடைய சாந்தமான குணம் தான்.