ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

Actor Jai: நிச்சயம் முன்னணி நடிகர் அந்தஸ்தை அடைவார் என்று எதிர்பார்த்த ஜெய் இன்னும் பத்தோடு பதினொன்றாகவே இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வரை அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் தேவையில்லாத பழக்கங்களினால் பல சர்ச்சைகளை சந்தித்தார். இதனால் அவருக்கான வாய்ப்புகளும் பறிபோனது.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருடன் டேட்டிங் செய்த மூன்று நடிகைகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். அதில் மார்க்கெட் உச்சத்தில் இருந்து அதல பாதாளத்திற்கு சென்ற அஞ்சலி இப்போது மீண்டும் தன் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து ஒரே வீட்டில் வாழ்ந்தது அனைவருக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த இந்த ஜோடி தற்போது ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து போய்விட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஜெய் தான். அஞ்சலியுடன் சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர் அவரை ஓவராக லவ் டார்ச்சர் செய்திருக்கிறார்.

சரியாக படத்தில் நடிக்க விடாமல் பாதியிலேயே அழைத்துச் செல்வது, வேறு ஹீரோவுடன் நடிக்கும் போது பிரச்சனை செய்வது என்று இருந்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன அஞ்சலி தன் மார்க்கெட் போய்விடும் என்ற பயத்தில் இவரை பிரேக் அப் செய்தார். அதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வந்த இவர் மீண்டும் தன்னுடைய ஐம்பதாவது படத்தின் மூலம் தமிழுக்கு வரவுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக அதுல்யா ரவி ஜெய்யுடன் டேட்டிங் செய்தார். ஆனால் ஒரு வாரத்திலேயே இவருடைய குணத்தை புரிந்து கொண்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். அதை தொடர்ந்து மூன்றாவதாக சிக்கியவர் தான் சின்னத்திரை நயன்தாரா. சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன் இப்போது பெரிய திரையில் நடித்து வருகிறார்.

அதில் ஜெய்யுடன் நடிக்கும் போது அவர் மேல் காதலில் விழுந்த இவர் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த செய்தி மீடியாவில் கசிந்து இவருக்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றாக குறைய தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்ட இவர் தற்போது ஜெய்யை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அஞ்சலியின் நிலைமை வரக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த சின்னத்திரை நயன்தாரா விவரமாக தப்பித்து விட்டார்.