3 மொக்கை படத்தால் மொத்த மார்க்கெட்டும் டவுன்.. கல்யாணம் பண்ணி செட்டிலாக முடிவெடுக்கும் பிரபாஸ்

Prabhas: பாகுபலியாக திரை உலகையே ஒரு கலக்கு கலக்கியவர் தான் பிரபாஸ். இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். இவர் தெலுங்கில் “ஈஸ்வர்” என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் வரிசையாக நடித்துக் கொண்டு இருந்தார். பில்லா, டார்லிங், மிஸ்டர் போன்ற திரைப்படங்கள் இவருக்கு சிறந்த நடிகர் விருதினை பெற்று தந்தது. பீக்கிலிருந்த இவரின் கெரியரை காலியாக்கிய 3 படங்களை பார்க்கலாம்.

இப்படியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று இருந்த இவர், பாகுபலி போன்ற மாபெரும் பான் இந்தியா அளவு ஹிட்டான திரைப்படத்தில் நடித்து விட்டு. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சொல்றது போல, அடுத்தடுத்து இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இவரின் மார்க்கெட்டையே க்ளோஸ் செய்ததுவிட்டது.

சகோ: இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், சர்தார் கபூர், அருண் விஜய், நித்தின், முகேஷ் இன்னும் பலர் இணைந்து நடித்து தெலுங்கில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சகோ. பிரபாஸ் ஹிந்தியில் நடித்த முதல் திரைப்படம் இதுதான். இதில் 2000 கோடி திருடிய திருடனை தேடுவது ஒரு மைய கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இத்திரைப்படத்திற்கு 350 கோடி பட்ஜெட், சுமார் 400 கோடி வசூலை குவித்தது. இருந்தாலும் ரசிகர்கள் சிலரால் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது.

ராதே ஷ்யாம்: 2022 இல் ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே கூட்டணியில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் இந்த லிஸ்டில் ஒன்றுதான். இது ஒரு ரொமான்டிக் திரைப்படமாகும். தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை, இருப்பினும் இத்திரைப்படம் சுமார் 200 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் இத்திரைப்படம் தான் இரண்டாவது அதிக வசூலை குவித்த தெலுங்கு திரைப்படமும் ஆகும். ஆனாலும் இத்திரைப்படம் பிரபாஸின் கேரியரை காலியாக்கியது.

ஆதி புரூஷ்: பிறகு இந்த வரிசையில் ராமாயண கதையை மையமாக தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆதி புரூஷ். இத்திரைப்படத்தில் ஹிந்தி திரை உலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். சுமார் 500 முதல் 700 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆனால் 300 முதல் 400 கோடி வரை தான் வசூல் செய்தது. இத்திரைப்படம் ரசிகர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளாகி மீம்ஸ் , ட்ரோல்ஸ்லில் கிழித்து தொங்க விடப்பட்ட திரைப்படமாகும்.

இதுபோன்ற தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளான பிரபாஸ், ஒரு விவரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் அவரின் அடுத்த வெளிவரப்போகும் சலார் திரைப்படமும் சரியாக ஓடவில்லை என்றால் கல்யாணம் செய்து கொள்ள போவதாக முடிவு எடுத்துள்ளார். கேரியர் டவுன் ஆன காரணத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறாரா, இல்லை திருமணத்துக்கு இது ஒரு சாக்கா என்று பொறுத்துதான் பாக்கணும்.