ஐஸ்வர்யா ராய் கிரஷ்ஷில் இருந்த 3 தமிழ் சாக்லேட் ஹீரோஸ்.. 90களில் தூக்கத்தை தொலைத்த உலக அழகி

உலக அழகின்னு சரியான பட்டத்தை தான் கொடுத்திருக்காங்க, இப்படி ஒரு அழகா என பலரையும் வியக்க வைத்த ஐஸ்வர்யா ராய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டுக்கு சென்றாலும் இப்போதும் கூட கோலிவுட் இவரை ஆராதிக்க தயாராகவே இருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வனில் நந்தினியாக மிரட்டிய இவரின் அழகில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இப்போதைய ஹீரோக்கள் கூட மயங்கி போனதே அதற்கு உதாரணம். இப்படி எங்கு திரும்பினாலும் புகழ் வெளிச்சத்தில் மின்னி கொண்டிருக்கும் இந்த உலக அழகியின் தூக்கத்தை கெடுத்த 3 தமிழ் சினிமா ஹீரோக்களும் இருக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த சாக்லேட் ஹீரோக்கள் மீது ஒரு தனி கிரஷ் இருந்தது. அந்த வகையில் ஆணழகனாக பெண் ரசிகைகளை கவர்ந்த பிரசாந்தை இவருக்கு மிகவும் பிடிக்குமாம். 90 காலகட்டத்தில் பாப்புலர் நாயகனாக வலம் வந்த இவர் உலக அழகியுடன் இணைந்து ஜீன்ஸ் படத்தில் நடித்திருக்கிறார்.

அப்போதிலிருந்தே அவர் பிரசாந்துடன் நட்பாக பழகுவாராம். இவருக்கு அடுத்தபடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த அப்பாஸை மிகவும் பிடிக்கும் என்று ஐஸ்வர்யா ராயே ஒரு முறை கூறியிருக்கிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த அப்பாஸ் உலக அழகியுடன் இணைந்து நடித்த பிறகு இன்னும் பிரபலமானார்.

அதன் பிறகு சரியான கதைகளை தேர்ந்தெடுக்காத காரணத்தால் இவர் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஆனாலும் இவர் என்றும் தமிழ் சினிமாவின் ஒரு சாக்லேட் பாய் தான். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு அரவிந்த் சாமியை ரொம்பவும் பிடிக்குமாம்.

ஆண்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு கொள்ளை அழகுடன் இருக்கும் இவரை போல் மாப்பிள்ளை வேண்டும் என்று ஏங்கிய இளம் பெண்களும் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இப்போதும் கூட இவருக்கு எக்க சக்கமான ரசிகைகள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவரை உலக அழகிக்கு பிடிக்காமல் போனால் தான் ஆச்சரியம். அந்த வகையில் இந்த மூவரும் ஐஸ்வர்யா ராய்க்கு பிடித்த ஹீரோக்களாக இப்பொழுதும் இருக்கின்றனர்.