Maamannan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த மாமன்னன் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. முதல் நாளில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் தற்போது இப்படத்தின் பல விஷயங்கள் சில விவாதங்களுக்கும் ஆளாகி இருக்கிறது.
அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் தேவர் மகன் இசக்கி தான் இந்த மாமன்னன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் படத்தை பார்த்த பலரும் இரண்டு படங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறி வருகின்றனர். இதன் மூலம் ப்ரமோஷனுக்காக தேவர் மகன் இழுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும் படத்தில் மாமன்னனாக வரும் வடிவேலுவின் நடிப்பு பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாமன்னன் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளது.
இந்த சூழலில் மாமன்னன் படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது. இதைத்தான் மாரி செல்வராஜ் அழுத்தமாக கூறியிருக்கிறார். அதாவது ஆதித்த தலைமுறை பற்றிய கருத்துக்களை ஆணித்தரமாக கூறியிருக்கும் இயக்குனர் அவரவர் வேலைகளை அவரவர் செய்ய வேண்டும் என இப்படத்தின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
அதேபோன்று ஆதிக்க வர்க்கத்தினர் இந்த தலைமுறையை ஒதுக்கி வைக்காமல் ஏற்றுக்கொள்வதாகவும் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு காட்சியில் வடிவேலு, உதயநிதி இருவரும் பகத் பாசிலை சந்திக்க செல்வார்கள். அப்போது வடிவேலுவை நிற்க வைத்துவிட்டு உதயநிதியை மட்டும் அவர் அமர சொல்வார். இதுதான் அரசியல் என்றும் கூறுவார்.
ஆனால் உதயநிதி தன் அப்பாவிற்கான சுயமரியாதையை கொடுக்க நினைப்பார். இதன் மூலம் பிறப்பால் அனைவரும் சமம் தான் என்பதையும் இயக்குனர் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஒருவேளை வேற்றுமை இருக்குமாயின் அது அவர்களுடைய வேலை விஷயத்தை மட்டும் தான் குறிக்கிறது. இது போன்ற பல விஷயங்களை இயக்குனர் உணர்த்தி இருப்பது பாராட்டும் விதமாகவே இருக்கிறது.