Jigarthanda Double X: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அப்போதிலிருந்து இப்போது வரை அதிகமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீஸ் ஆகப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துடன் இன்னும் டாப் ஹீரோக்களின் இரண்டு படங்களும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது. இதனால் இந்த வருட தீபாவளி சரவெடியாக இருக்கப்போகிறது. ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற டைட்டிலுடன் அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.
இதில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்ஜே சூர்யா ரெட்ரோ லூக்கில் காணப்படுகிறார். ராகவா லாரன்ஸ் முரட்டுத்தனமான கடத்தல் காரராக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிலும் படத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டு முக்கிய சண்டைக் காட்சிகள் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் மேற்பார்வையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஷெட்யூல் ஜூன் 18 ஆம் தேதி கேரளாவில் நடைபெறப்போகிறது.
இந்த படத்தில் நிச்சயம் கார்த்திக் சுப்புராஜ் தொழில்நுட்பத்தில் வேற லெவலின் சம்பவம் செய்து கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருவதாகவும், இது முதல் பாகத்தை விட தரமாக உருவாகுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படம் தீபாவளி ரேஸில் கடுமையான போட்டியாக இருக்கப் போகிறது. மேலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகிறது. ஆகையால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், அயலான் போன்ற மூன்று படங்களுக்கும் இடையே தீபாவளி ரேஸில் கடும் போட்டி நிலவ போகிறது.