ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து ஹீரோவாக முன்னேறிய 4 நடிகர்கள்.. ரஜினியை கலங்கவைத்த கனல்கண்ணன்

ஆரம்பத்தில் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி சில படங்களில் ஹீரோவாக ஒரு சில பிரபலங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தக்கவைத்துக் கொண்டு அவர்கள் ஹீரோவாக நடித்தாலும் அவர்களை வில்லன் அல்லது காமெடியனாக மாற்றியுள்ளனர். அவ்வாறு காமெடியனாக மாறி 4 ஸ்டண்ட் மாஸ்டர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

மன்சூர் அலிகான் : குரூப் டான்சர், பைட் மாஸ்டராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த மன்சூர் அலிகான் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ஒரு மாஸ் வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஆனால் அவரை தற்போது காமெடி நடிகராக மாறி உள்ளார்.

கனல் கண்ணன் : கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் கனல் கண்ணன். இவரது சண்டைக்காட்சிகள் இல்லையேல் சிரிக்கும் படியான சில விஷயங்களை வைத்திருப்பார் அதே போல் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் கனல் கண்ணன் நடித்துள்ளார்.

பொன்னம்பலம் : தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்றாலே நாம் அதற்கு நினைவில் வருவது நடிகர் பொன்னம்பலம் தான். இவர் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் சில வருடங்களாக வயது முதிர்வு காரணமாக வில்லன் கதாபாத்திரங்களை விட்டுவிட்டு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

திலீப் சுப்புராயன் : ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் திலீப் சுப்புராயன். இவர் சங்கு சக்கரம் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.