Kayadu Lohar: நயன்தாரா காலமெல்லாம் போய் இப்போது இளம் நடிகைகள் டிரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னதாக பிரியங்கா மோகன் பல படங்களில் கமிட்டாகி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
அவருக்கும் இப்போது மார்க்கெட் டவுன் ஆகிவிட்டது. அந்த வகையில் டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் 49ஆவது படம் மற்றும் அதர்வாவின் இதயம் முரளி ஆகிய படத்தில் கயாடு தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதை அடுத்து ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். மேலும் விஷ்வாக்ஷன் மற்றும் நிவின் பாலி ஆகியோரின் படங்களிலும் நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு.
ட்ரெண்டிங்கில் இருக்கும் 4 நடிகைகள்
இப்போது விஜய், விஷால், துருவ் விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் மமிதா பைஜு நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை தான் ஸ்ரீ லீலா. மருத்துவ படிப்பு முடித்த இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தில் ஸ்ரீ லீலா நடித்துள்ளார்.
ஜவான் படத்தில் நடித்தவர் தான் சானியா மல்ஹோத்ரா. இவர் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியான நிலையில் இவரது நடனம் ரசிகர்களால் கவரப்பட்டு இருக்கிறது.