கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளத்தில் பெரிய தேடலே நடிகர் ஸ்ரீ தான். 2006-2008 விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் இரண்டில் நடித்தவர் ஸ்ரீ. அதன்பின் 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் தொடங்கிய முதல் சீசனிலேயே அதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் இந்த ஸ்ரீ.
2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18 படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை தொடங்கினார். அந்த படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற அளவில் இருந்தது இவரது நடிப்பு. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று முதல் படமே இவருக்கு நன்றாக அமைந்தது.
அதன்பின் 2013ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படமும் இவருக்கு நல்ல ஒரு திருப்பமுனையாக அமைந்தது. மெடிக்கல் காலேஜ் மாணவனாக சந்துரு கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அடுத்தடுத்து இவர் நடிப்பில் சோன்பப்படி, வில் அம்பு போன்ற படங்கள் வெளியாகியது. இந்த படங்களிலும் இவரது நடிப்பு நன்றாகத்தான் இருந்தது. சினிமாவில் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று தேவையில்லாத பழக்கங்களால் சீரழிந்து விட்டார்.
2017ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல டர்னிங் பாயிண்டாக அமைந்தது. ஓராண்டுக்கு முன்பு கூட இறுகப்பற்று என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
இப்பொழுது சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில் போதைக்கு அடிமையான இளைஞன் போல் காட்சியளிக்கிறார். மேலும் தன்னை ஒரு லேடி பாயாக காட்டிக் கொள்கிறார். தாய்லாந்து சென்று நிறைய ஆண்கள் இப்படி மாறியுள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரீராம் இடம் பிடித்து விட்டாரா என்று தெரியவில்லை.