தமிழுக்கு வந்த 4 புதுவரவு நடிகைகள்.. அஜித்- ஆதிக் படத்துக்கு சல்லடை போடும் ஹீரோயின்ஸ்

AK 63 Movie heroine: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்போது அஜித் உடனான ஆக்சன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். சீக்கிரம் இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்தில் இணைய போகிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என ஹீரோயினை சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கான லிஸ்டில் சமீபத்தில் கோலிவுட்டிற்கு புதுவரவாக வந்திருக்கும் நான்கு நடிகைகள் தான் உள்ளனர். முதலாவதாக தற்போது தளபதியின் கதாநாயகியாக தி கோஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மீனாட்சி சவுத்ரி தான் இருக்கிறார்.

இவர் 2018ல் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தை பெற்று, அதன் பின் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழுக்கு விஜய்யின் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கிறார். விஜய்யுடன் நடித்த பிறகு அஜித்துடன் நடிக்காமல் இருந்தால் எப்படி என்று இவரையும் ஆப்ஷனலில் வைத்துள்ளனர்.

அஜித்தின் அடுத்த பட கதாநாயகி இவரா?

அடுத்ததாக சீதாராமன் படத்தில் மகாலட்சுமி ஆக நடித்த நடிகை மிருணாள் தாக்கூர் இப்போது இளசுகளின் பேவரைட் ஹீரோயின் ஆக மாறிவிட்டார். ஹிந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் இப்போது தமிழிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் அஜித்தின் 63வது படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

தொடர்ச்சியாக சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் கதாநாயகியாக நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவிற்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இவரும் அடுத்து அஜித்துடன் ஜோடி போட வாய்ப்பு இருக்கிறது.

அதை போல் கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானியை ஏகே 63 படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நான்கு புதுவரவு நடிகைகளில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துக்கு சரியான கதாநாயகி இவர்தான் என யாரை தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.