தமிழ் சினிமாவில் ஒரே நாளில் நான்கு புதிய படங்கள் பூஜையுடன் களமிறங்கின. படப்பிடிப்பையும் நேற்றே தொடங்கிவிட்டனர் அப்படங்களின் விவரங்களைப் பார்ப்போம்.
அங்கீகாரம்
தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தை ரீகன் இயக்குகிறார்.மலையாள நடிகர்கள் அர்ஜூன் அசோகன், அஜூ வர்கீஸ் மற்றும் ‘கோர்ட்’ நாயகி ஶ்ரீதேவி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர் நடிப்பில் முதல்படமான ‘அங்கீகாரம்’ இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இவன் தந்திரன் 2
2017ல் கெளதம் கார்த்திக் முன்னணி நடிகராக வெளியான ‘இவன் தந்திரன் படத்திற்கு தொடர்ச்சியாக ‘இவன் தந்திரன் 2’ உருவாகிறது. இரண்டாம் பாகத்தில் ‘வடசென்னை’ சரண் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை விழா நேற்று நடந்தது.
டிமாண்டி காலனி 3
அருள்நிதி நடிப்பில் 2015ல் வெளியான ‘டிமாண்டி காலனி’ வெற்றியைத் தொடர்ந்து, டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் 2023ல் வந்தது. இப்போது மூன்றாம் பாகம் ‘டிமாண்டி காலனி 3 க்கும் நேற்று பூஜை நடைபெற்றது. நடிகை ப்ரியா பவானி ஷங்கர், “Lady with the braid is back” என சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தபு மற்றும் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். பூரி மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
ஒரே நாளில் நான்கு படங்கள் பூஜையுடன் களமிறங்கியது தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு பெருக்கி உள்ளது. புதிய கூட்டணிகள், தொடர்ச்சி பாகங்கள், வித்தியாசமான கதைகள் என ரசிகர்களுக்கு விருந்தாகும் படங்கள் உருவாகி வருகின்றன.