Actor Vijay: தன் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர் தான் விஜய். இவர் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி உடன் தற்பொழுது மாணவர்களுக்கு வழிகாட்டியாய் கூறி வரும் விஷயங்கள் குறித்த தகவலை பற்றி இங்கு காண்போம்.
சினிமாவில் தனக்கென அங்கீகாரம் கொண்டு ரசிகர்களை தன் வசப்படுத்திய விஜய் தற்பொழுது அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இது குறித்து, எடுத்து வைக்கும் ஒவ்வொரு முடிவுகளும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது.
தன் தலைமையில் அனைத்திந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல நலப் பணிகளை செய்து வரும் இவரின் இத்தகைய செயல்பாட்டிற்கு மக்களின் ஆதரவை பெற்று வருகிறார். அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் இடையே முன்னேற்றம் வேண்டி இவர் கூறிய 4 விஷயங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அவ்வாறு புத்தகம் படிக்க ஆரம்பித்த விஜய் தற்பொழுது இளைய தலைமுறைகளை படிக்க முன்வருமாறு எழுச்சி பட பேசினார். அதை தொடர்ந்து அம்பேத்கார், காமராஜர், பெரியார் போன்ற மாபெரும் தியாகிகளின் வரலாற்றுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் சொல்லும் நல்ல வழிகளை தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துங்கள் என கூறும் விஜய், தலைமுறையினர் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் என் நேரமும் செல்போனில் மூழ்கி இருப்பவர்களுக்கு விழிப்புணர்வாக சினிமா பாணியில் சினிமா டயலாக் பேசியும் மக்களின் ஆர்வத்தை ஈர்த்தார்.
இதற்கு உதாரணமாக தனுஷ் படமான அசுரன் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் வசனத்தை பேசி அசத்தினார். அதாவது உங்களிடம் காசு இருந்தால் அதை பிடுங்கிக் கொள்வார்கள், இடமிருந்தால் அதையும் பிடுங்கிக் கொள்வார்கள் ஆனால் கல்வி மட்டும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற செய்தியை தன் பாணியில் இளம் தலைமுறையினருக்கு மொழிந்தார் விஜய்.