Daniel Balaji: டேனியல் பாலாஜியின் நடிப்பை பார்த்து மிரளும் அளவிற்கு கொடூரமான வில்லத்தனத்தையும், பார்வையிலே பயப்பட வைக்கும் விதமாக மிரட்டலான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய இழப்பு பேரிழப்பாக குடும்பத்திற்கும், சினிமா திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கும் இருக்கிறது.
இருந்தாலும் இவருடைய நடிப்பை என்றைக்கும் மறக்கவே முடியாது அளவிற்கு ஞாபகப்படுத்தும் விதமாக தனுசுடன் மோதும் பொல்லாதவன் ஆகவும், விஜய்யுடன் சண்டை போடும் பைரவாக, பிகில் படத்தில் மாஸ் ஆகவும் பல பரிமாணங்களில் இவருடைய நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இருந்த பொழுதிலும் டேனியல் பாலாஜி நடிப்பில் சில படங்கள் வெளி வராமல் இருக்கிறது. அந்த வகையில் காட்மன் வெப் சீரியஸில் சர்ச்சையை கிளப்பும் அளவிற்கு மதங்களை பற்றி அடிப்படையாக வைத்து நடிகர் ஜெய் பிரகாஷ் மற்றும் சோனியா அகர்வாலுடன் சேர்ந்து டேனியல் பாலாஜியும் நடித்திருக்கிறார்.
சர்ச்சையை ஏற்படுத்திய வெப் சீரியஸ்
இந்த வெப் சீரியஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. ஆனால் இதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்துள்ளதால் இப்படத்தை அப்படியே நிறுத்திவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள பேய் பசி படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருக்கிறார். இதில் உள்ள நான் அப்பாடக்கர் பாடல் யூடியூபில் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இன்னும் வரை இப்படம் வெளிவராமல் இருக்கிறது. அடுத்ததாக இரவு மற்றும் மானே தேனே பேயே போன்ற இரண்டு படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்திருக்கிறார். இந்த படங்களும் எப்பொழுது வெளிவரும் என்று தெரியாத அளவிற்கு நிறுத்தப்பட்டு வைத்திருக்கிறார்கள். இப்படி டேனியல் பாலாஜி நடித்து வெளிவராமல் இருக்கும் படங்கள் டிராப் ஆகியிருக்கிறது.