கணேஷ்கர் சனிக்கிழமை இரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின்னாலிருந்து வந்த நபர் காயமடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி எதிரே வந்த ஒரு கார் மீது மோதி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய கணேஷ்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த கணேஷ்கர். அங்கே விபத்து நடந்தது உண்மைதான். கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தெரியாமல் விபத்து நடந்துவிட்டது. நான் சிறிது தடுமாற்றத்தில் இருந்தேன் அதனால் ஆர்த்தி வந்து என்னை அழைத்துச் சென்றுவிட்டார்.
மற்றபடி நான் குடித்து விட்டோ, அல்லது நிதானத்தில் இல்லாமலோ விபத்தை ஏற்படுத்தவில்லை. எல்லா பத்திரிகைகளிலும் நான் சனிக்கிழமை இரவு குடித்துவிட்டு, வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டதாக எழுதி வருகின்றனர்.
இந்த நிகழ்வை பிரபல தொலைக்காட்சியில் பேசும்போது கூட, ஆர்த்தி தெளிவாக இருந்தார். கணேஷ்கர் சற்று சொல்லி கொடுத்து பேச வைத்தது போல் பேசிக் கொண்டிருந்தார. இவர்கள் மேல் தப்பு இல்லை என்றால் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கலாம் என்று விபத்தை பார்த்தவர்கள் பேசி வருகின்றனர்
இந்நிலையில் அவர்கள் இருவரும், இப்படி எதுவும் தெரியாமல், எங்களுடைய 40 வருட சினிமா வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விட்டனர். போலீசாரும் நான் ஓடி ஒழிந்து விட்டதாக ஒரு தகவலை பரப்பி வருகின்றனர்.
அப்படி அவர்கள் செய்வதால் எங்களுடைய சினிமா வாழ்க்கை மட்டுமல்லாமல், எங்களுடைய மனதும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் தவறான செயலை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.