தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவரின் மகள் தற்போது ஹீரோயின் போல் இருப்பதால் அவரை எப்படியாவது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் படையெடுத்துள்ளனர்.
தமிழில் தவிர்க்க முடியாத நடிகையாக 90 காலகட்டங்களில் வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலுள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார்.
அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகையாக இருந்தார். சினிமாவில் செல்வ செழிப்பாக இருந்த ரோஜா மார்க்கெட் குறையும்போது இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டு சாதனை புரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவுக்கு ரோஜா தன்னுடைய அழகான மகளை அலங்காரப்படுத்தி அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதைப்பார்த்த அக்கட தேசத்து தயாரிப்பாளர்கள் அனைவரும் உங்கள் மகள் சினிமாவில் நடிப்பதற்கு தகுதியான பெண் எனவும், அச்சு அசல் உங்களைப் போலவே இருப்பதால் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது எனவும் அடி போட்டுள்ளனர்.
ஆனால் உஷாரான ரோஜா இப்போதைக்கு அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் மகளுக்கு இல்லை எனவும், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் எனவும் அவர்களை நாசுக்காக விரட்டி அடித்து விட்டாராம்.
