பிரசாந்துக்கு லைஃப் டைம் ஹிட்டான 5 படங்கள்.. இன்றும் சிம்ரனை விட்டுக் கொடுக்காத அந்த கெமிஸ்ட்ரி

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து பிரசாந்தை அந்தகன் படம் மூலம் திரையில் பார்க்க முடிந்தது. 2019 ஆம் ஆண்டு தெலுங்கு படமாகிய “வினைய விதைய ராமா” படத்தில் ராம் சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதற்கு முன்னர் 2017-18 காலகட்டங்களில் புலன் விசாரணை மற்றும் ஜானி என்ற படங்களில் நடித்திருந்தார்.

80களில் சாக்லேட் பாயாக வளம் வந்த பிரசாந்துக்கு ஆஸ்தான ஹீரோயின் என்றால் சிம்ரன் தான். சிம்ரன் உடன் மட்டும் 5 படங்களில் ஜோடி போட்டு உள்ளார் டாப் ஸ்டார். அப்பொழுது இவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி படத்திற்கு நல்ல பிளஸ் பாயிண்டாக அமைந்தது.

கண்ணெதிரே தோன்றினாள்: இந்த படத்தை அப்பொழுது இளைஞர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். நண்பனா, காதலா என்று இந்த படத்தின் கதை அமைந்திருக்கும். பிரசாந்த், சிம்ரன், கரன் என அனைவரும் படத்தில் நன்றாக நடித்திருப்பார்கள்.

ஜோடி: இந்த படமும் பிரசாந்துக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்த ஒன்று. இப்பொழுதும் எல்லா கல்யாண வீடுகளிலும் இந்த படத்தின் பாடல்கள் தான் ஒலிக்கும். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இன்றும் சிம்ரனை விட்டுக் கொடுக்காத அந்த கெமிஸ்ட்ரி

தமிழ்: பிரசாந்தை மீண்டும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய படம் இது. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். இந்த படம் தான் ஹரியை ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது.

பார்த்தேன் ரசித்தேன்: சிம்ரன் வில்லி கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்த படம். சரண் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் முதன்முதலாக ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக நடித்திருப்பார். லைலா, ரகுவரன் போன்றவர்களும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்பொழுது ஐந்தாவது முறையாக அந்தகன் படத்தின் மூலம் சிம்ரன் மற்றும் பிரசாந்த் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதுபோக பிரசாந்துக்கு ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம், ஆசையில் ஓர் கடிதம், வின்னர் என பல படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.