ரெட் கார்ட் பிரச்சனையில் பெயர் வெளிவராமல் இருக்கும் 5 பிரபலங்கள்.. பல கோடிகளை ஆட்டைய போட்டிருக்கும் மருமகன்

Red Card For Tamil Actors: கோலிவுட்டில் இப்போது ரெட் கார்ட் பிரச்சினை தான் தலை விரித்து ஆடுகிறது. முன்பு நடிகர்களுக்கெல்லாம் இருந்த பொறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது தான் இந்த பிரச்சனைக்கு முழு காரணம். அதிலும் டாப் 5 நடிகர்களின் பெயர்களும் இந்த பிரச்சனையில் மாட்டிக் இருக்கிறது. ஆனால் அது வெளியில் தெரியாமல் சமாளித்து வருகின்றனர்.

முதலில் வடிவேலு தான் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வராமல் இருப்பதும், அப்படியே வந்தாலும் அந்தப் படத்திற்கான காஸ்ட்யூம் போட மறுப்பதும் என ஏகப்பட்ட ரகளை செய்து கொண்டிருந்தார். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து ஓரம் கட்டினார்கள். இப்போது மறுபடியும் படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். ஆனால் அவரைப் போலவே நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் விஷாலிடமும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கின்றனர்.

அதேபோலவே சற்றும் யாரும் நம்ப முடியாத அளவுக்கு பயங்கரமான தில்லாலங்கடி வேலையை தனுஷும் பார்த்து இருக்கிறார். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில்முக்கிய பொறுப்பில் இருப்பவரிடம் 20 கோடியை அட்வான்ஸ் ஆக வாங்கி இருக்கிறார். அவர் அந்த பணத்தை முழுவதுமாக போயஸ் கார்டனில் 150 கோடிக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வீட்டில் தான் போட்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியின் மீதும் குற்றம் சாட்டுகின்றனர். அவர் வரிசையாக நிறைய படங்களில் கமிட் ஆகி அதற்கான அட்வான்ஸ்சையும் வாங்கி இருக்கிறார். அதேபோல விஜய்யும் தன்னுடைய சம்பளத்தை 200 கோடிக்கு ஏற்றி இருக்கிறார்.

இது அவராக ஏற்றியதா! இல்லை அவருக்கு யாரும் ஏற்றி விடுகிறார்களா! என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். ஒரு நடிகர் தன்னுடைய ஒரே ஒரு படத்திற்கு மட்டும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதால் அந்த படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறி விடும் என்பது தெரியவில்லையா என்று சின்ன சின்ன தயாரிப்பாளர்களும் விஜய்யின் மீது கொலை காண்டில் இருக்கின்றனர்.

அதேபோல யோகி பாபுவும் சமீபத்தில் எந்த படத்தில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைத்தார் என்பதே மறந்து போய்விட்டது. அந்த அளவிற்கு நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருக்கக்கூடியவர், நிறைய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு டப்பிங் பேசி கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்றதாக காரணம் கூறுகிறார்.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போவதால் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இவர்களுக்கும் ரெட்கார்ட் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவர்களது பெயரை மட்டும் வெளியே தெரியாமல் சைலன்டாக வைத்திருக்கின்றனர்.