கே டி குஞ்சுமோன் அறிமுகப்படுத்தி புகழை சம்பாதித்த 5 பிரபலங்கள்.. 175 நாட்கள் ஓடி கலெக்ஷன் பார்த்த அர்ஜுன்

5 Celebrites: பன்முகத் திறமை கொண்டு தமிழிலும், மலையாளத்திலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் குஞ்சு மோன். இவர் இயக்கத்தில் எண்ணற்ற படங்கள் வெற்றியைக் கண்டிருக்கிறது. இந்நிலையில் இவரால் தமிழ் சினிமாவில் பேசப்பட்ட 5 பிரபலங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

மலையாள மொழி படங்களை இயக்கி வெற்றி கொண்டு வந்த இவர் தமிழில் அறிமுகமான படம் தான் சூரியன். இப்படம் சரத்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றி படமாய் அமைந்தது. அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இவர் தயாரிப்பில் உருவான வெற்றி படம் தான் ஜென்டில்மேன்.

1993ல் அர்ஜூன், மனோபாலா, நம்பியார், மனோரமா, வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. ஏழை குழந்தைகளின் கல்விக்காக திருட்டை மேற்கொள்ளும் அர்ஜுனனின் நடிப்பை கொண்டு இப்படம் 175 நாள் திரையில் ஓடி வெற்றி சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் வெற்றியை கொண்டே இயக்குனர் ஷங்கர் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு பல வாய்ப்புகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரிப்பில் 1994ல் வெளிவந்த படம் தான் காதலன். இப்படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருப்பார்கள்.

இரண்டாவது முறை இவர்கள் கூட்டணியில் உருவான இப்படம் பணக்கார பெண்ணிடம் ஏற்படும் காதலை மையப்படுத்தி உருவான கதை அம்சம் கொண்டு மாபெரும் வெற்றியை சந்தித்தது. இதைத்தொடர்ந்தே பிரபுதேவா முன்னணி கதாநாயகனாய் பல படங்களில் வாய்ப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை கொடுத்து ஏ ஆர் ரகுமானை தூக்கி விட்டார் என்றால் அது மிகையாகாது. அதைத் தொடர்ந்து இயக்குனர் பவித்ரன் குஞ்சுமோன் இணைந்து வெளிவந்த படங்கள் தான் வசந்தகால பறவை, சூரியன், இந்து.

அறிமுகம் இல்லாது, இயக்கத்தை மேற்கொண்ட பவித்திரனுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட பெருமை குஞ்சு மோன்னையே சேரும். அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில் குஞ்சு மோன் தயாரிப்பில் மேற்கொண்ட படம் தான் ரட்சகன். நாகார்ஜூனா, சுஷ்மிதா சென் இணைந்து நடித்து காதல் படமாய் வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.