பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி தயாரிப்பாளர்களை துண்டை போட வைத்த 5 படங்கள்.. விக்ரம் கொடுத்த படு மொக்கை

2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் மண்ணைக் கவ்வியது. சிறிய ஹீரோக்கள் படம் மட்டுமல்லாது பெரிய ஹீரோக்கள் படங்களும் தயாரிப்பாளரை துண்டு போட வைத்தது. அப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரவேற்கப்பட ஐந்து படங்களின் தொகுப்பு,

எதற்கும் துணிந்தவன்: இந்த படத்திற்கு புரோமோஷன் என எல்லாம் அமோகமாக இருந்தது. படத்தின் இசையும் மிகவும் அற்புதமாக இருந்தது அதனால் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டாகியது. ஆனால் இந்தப்படம் சூர்யாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.

வீரமே வாகை சூடும்: விஷால் நடிப்பில் ஒரு ஆக்ஷன் திரில்லராக வெளிவந்தது இந்த படம். ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விஷாலுக்கு இந்த படம் ஒரு பெயிலியர் படமாக அமைந்தது.

கூகுள் குட்டப்பா: மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்,படத்தின் அப்படியே ரீமேக் தான் இந்த கூகுள் குட் டப்பா. கே எஸ் ரவிக்குமார் மற்றும் பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் வெளியான இந்த படம் எதிர்பார்ப்பு இருந்தும் கூட மிகவும் தோல்வி படமாக அமைந்தது.

மகான்: இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவந்த இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் இந்தப்படம் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.

காபி வித் காதல்: சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கும். ஜீவா, ஜெய் போன்றோர்கள் நடிப்பில் வெளிவந்த காபி வித் காதல் படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.