முதல் பாகம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த 5 படங்களில் இரண்டாம் பாகம் இன்று வரை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் கூட இந்த படங்களை வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அப்படி தயாரிப்பாளர்கள் எடுப்பதற்கு தயக்கம் காட்டும் ஐந்து படங்கள்
சதுரங்க வேட்டை 2: கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான சதுரங்க வேட்டை படத்தை மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இதன் இரண்டாம் பாகம் அரவிந்த்சாமி நடித்தும் முடித்துவிட்டார் ஆனால் இப்பொழுது வரை படம் வெளிவரவில்லை. முதல் பாகத்தை தயாரித்தவர் மனோபாலா.
துப்பறிவாளன் 2: விஷாலுக்கு பிரேக் கொடுத்த படம் இது. ஆக்சன் திரில்லராக வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் மிஷ்கின். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் விஷால் அதை இயக்க முன் வந்தார் இருந்தாலும் இதற்கு முடிவு கிடைக்கவில்லை.
96: விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரேம்குமார் ரெடி பண்ணிவிட்டார் ஆனால் விஜய் சேதுபதி அதில் நடிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இப்பொழுது இந்த படம் அலமாரியில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.
தனி ஒருவன்2: இயக்குனர் மோகன் ராஜாவின் சிக்னேச்சர் படம் தனி ஒருவன். தனது தம்பி ஜெயம் ரவிக்கு சரியான ஒரு டர்னிங் பாயிண்டாக இந்த படம் அமைந்தது கொடுத்தார். பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற போதிலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவில்லை. இதை எடுக்கப் போவதாக டைட்டில் டீசர் அறிவித்து இருந்தார் மோகன் ராஜா. ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை
வடசென்னை 2: ஏழு வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்து சக்க போடு போட்டது வடசென்னை. அப்போதே கூடிய விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என வெற்றிமாறன் அறிவித்திருந்தார். ஆனால் இப்பொழுது வரை தனுஷ் அழைப்பு விடுத்தும் வெற்றிமாறன் டபாய்கிறார்.