cinema : தமிழ் திரையுலகில் தற்போது ஒரு நாளைக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்று கணக்கு போட வேண்டியதாகி உள்ளது. ஆனால் முந்தைய காலகட்ட சினிமாவில் ஒரு வருடத்திற்கு ஒரு படம் ஆறு மாதத்திற்கு ஒரு படம் என வெளியாகும் அனைத்துமே வெற்றியும் அடையும் காரணம், ஒவ்வொரு படத்திற்கும் உள்ள இடைவெளி.
ஆனால் தற்போது போட்டி போட்டுக் கொண்டு வரிசையாக படங்கள் வெளியாகின்றன இதில் எத்தனை படங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க போகின்றன என்பது கேள்விக்குறியாகி போகிறது. அந்த வகையில் இன்று ஜூன் 27, 2025 வெளியாக இருக்கும் முக்கியமான சில படங்களை பார்க்கலாம்.
மார்கன் : விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த மார்கன் படம் இன்று திரைக்கு வரவிருக்கிறது. இது ஒரு கிரைம் கில்லர் படம். பொதுவாக விஜய் ஆண்டனி கதைகளும் அனைவரையும் கவரும் வகையில் தான் இதுவரையில் அமைந்திருக்கிறது ஆகையால் இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் மேரேஜ் : நடிகர் விக்ரம் பிரபு நடித்து இன்று திரைக்கு வரவிருக்கும் படம் தான் லவ் மேரேஜ். காதல் கதைக்களத்தை மையப்படுத்தி இந்த படம் சற்று மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விக்ரம் பிரபு அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.
குட் டே : குட் டே படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் நடித்துள்ளார். இந்த படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற வகையில் அமைந்துள்ளது. புதியதாக கதைக்களம் ஏதும் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புதிய கதை மற்றும் அட்டகாசமான நடிப்பு இருந்தால் இந்த படம் வெற்றிவாகை சூடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
கண்ணப்பா : கண்ணப்பா என்பது தெலுங்கு படம். இது ஒரு பெரிய பட்ஜெட் படம். இந்த படம் சிவன் பக்தரான கண்ணப்பாவின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை. பிரபலமான பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் புராண கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றிவாகை சூடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்குறள் : இந்த காமராஜர் படம் எடுத்த டீமோட அடுத்த படம். தற்போது திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை மையமாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளனர். இது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெறுமா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. மற்றபடி இது அனைவராலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கதை என்பதால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கனுடன் மல்லுக்கட்டும் கண்ணப்பா..
மார்கன் படம் மற்றும் கண்ணப்பா படம் பெருமளவில் போட்டிக்கு உள்ளாகவிருக்கும் படம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளுக்கு இத்தனை படம் என்று வெளியாகிக் கொண்டிருந்தால் எத்தனை படங்கள் வெற்றிவாகை சூட போகிறது என்பது கேள்விக்குறி. மேலும் வரும் காலகட்டத்தில் இன்னும் நிறைய படங்கள் வெளிவர போட்டிகள் எழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.