வடிவேலுவை வச்சு செய்யும் 5 பெரிய ஹீரோக்கள்.. சுத்தி சுத்தி அடிக்கும் கர்மா!

வடிவேலு இல்லாமல் எந்த ஒரு சோசியல் மீடியாவும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு அவருடைய வசனங்கள் தான் மீம்ஸ்களாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் இவர் திரையுலகை பொருத்தவரை ஒரு பிரச்சனைக்குரிய மனிதராகவே இருக்கிறார்.

அதனாலேயே இவர் சில வருடங்கள் சினிமா துறையை விட்டு ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவின் நடிப்பில் கடைசியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பெரிய ஹீரோக்கள் பலரும் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அதிலும் சிலர் இயக்குனர்களிடம் அவர் நடிக்க கூடாது என்று முகத்திற்கு நேராகவே சொல்லி விடுகிறார்களாம். அந்த அளவுக்கு மனுஷன் அனைவரிடமும் ஏதோ ஒரு பிரச்சனையை செய்து வைத்திருக்கிறார்.

அதில் அஜித்துடன் இவருக்கு இருக்கும் கருத்து வேறுபாடு பலருக்கும் தெரியும். அவரை மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தினாலேயே வடிவேலு இப்போது வரை அஜித் படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்திலும் இவர் சமீப காலமாக நடிப்பதில்லை. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு விளையாட்டாக பேசிய விஷயம் ரஜினியை வருத்தப்பட வைத்திருக்கிறது.

மேலும் படிக்காதவன் படத்தில் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பாதியிலேயே ஷூட்டிங்கை விட்டு வெளியேறினார். அதன் காரணமாகவே இப்போது தனுஷ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலுவை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் சூர்யா, விஜய் ஆகியோரும் வடிவேலு வேண்டாம் வேறு காமெடியனை நடிக்க வைக்கலாம் என்று கூறுகிறார்களாம்.

இதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் வடிவேலு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது சம்பள விஷயத்தில் பிரச்சனை செய்வது என்று ரொம்பவும் அடாவடி செய்து இருக்கிறார். அந்த கர்மா தான் இப்போது அவரை சுற்றி சுற்றி அடிக்கிறது. இவரால் பல ஹீரோக்களும் மணி கணக்கில் காத்துக் கொண்டிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது. அதனாலேயே இப்போது பெரிய ஹீரோக்கள் எல்லாம் இவரை வச்சு செய்து வருகின்றனர்.