ரீ-என்ட்ரியை தவறவிட்ட 5 ஹீரோக்கள்.. போர்தொழிலோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட ரஜினியின் நண்பன்

5 Heroes Who Missed Re-Entry like sarath babu and karthik: தமிழ்சினிமாவில்  உச்சம் பெற்ற நடிகராக பெயரும் புகழும் வாய்க்கப் பெற்று நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள், காலத்தின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி காணாமல் போன கதையும் உண்டு. ரீஎன்ட்ரி கொடுத்தாலாவது மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற  நப்பாசையில் திரும்பி வந்தாலும் இளம் தலைமுறைடன் ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கிய 5 ஹீரோக்களை பற்றி காணலாம்,

சுமன்: 80 ஸ் காலகட்டத்தில் கமலுக்கு இணையாக பெண் ரசிகர்களை அதிகமாக கொண்டிருந்தவர் நடிகர் சுமன் ஆவார். தீ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்து இருந்த சுமன் 35 வருடங்களுக்குப் பின்பு சிவாஜியில் ரஜினியின் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்தார். ஏகன், குருவி, எங்கேயும் காதல் போன்ற படங்களில் நடித்திருந்த சுமன் தற்போது அரசியலில் இறங்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்

கார்த்திக்: 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் இன் ஃபேவரைட் ஹீரோ என்றால் அது கார்த்திக் ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவு ரசிகர்களை அதிகம் கவர்ந்த கார்த்திக் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதை பலமுறை வென்றுள்ளார். அனேகன் படத்தில் தனது புகழ்பெற்ற வசனமான சந்திர மௌலி என்ற பெயரிலேயே கார்த்திக் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தாலும் அதற்கு பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் கார்த்திக்.

பாண்டியராஜன்: “காதல் கசக்குதையா” என்று இளைஞர்களை கொண்டாட வைத்த 80 ஸ் நாயகன், தனது எதார்த்தமான வசனங்களாலும், காமெடியாலும், குறுகுறு பார்வையினாலும் ,ரசிகர் பட்டாளங்களை தனதாக்கி கொண்டிருந்தார். தொடர் தோல்வி மூலம் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பாண்டியராஜன் அஞ்சாதே படத்தில் வில்லனாகவும், விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தில் காமெடியனாகவும் தோன்றி ரசிகர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி இருந்தார்.

சரத் பாபு: 80 ஸ் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தவர் குணச்சித்திர நடிகர் சரத்பாபு.  முத்து மற்றும் அண்ணாமலையில் ரஜினியின் நண்பனாக நடித்திருந்த சரத் பாபு  வயது முதிர்ந்த நிலையில் பட வாய்ப்புகள் குறையவே போர்த் தொழிலில் கில்லர் ஆக  நடித்திருந்து ஆச்சரிய பட வைத்தார் இதுவே இவர் நடித்த கடைசி தமிழ் திரைப்படம்.

சுதாகர்:  பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா மற்றும் சுதாகரின் காதல் காட்சிகள் அன்றைய 80 ஸ் ரசிகர்களை கொள்ளை கொண்டவை. வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் நடித்து பிசியாக இருந்த சுதாகர் திடீரென தமிழ் திரையுலகில் காணாமல் போய்விட்டு, சுட்டி பையன் திரைப்படத்தில் காமெடியனாக வந்து அதிர்ச்சியை உண்டாக்கினார். மீண்டும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்  படத்தில் நடித்த அவரை அதற்குப்பின் எந்த ஒரு படத்திலும் பார்க்க முடிவதில்லை.