நடனத்தில் பிரபுதேவாவுக்கு டஃப் கொடுத்த 5 ஹீரோயின்கள்.. 2 MBBS டாக்டர்கள் போடும் குத்தாட்டம்

ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே போதும் கற்பூரம் போல் ஐந்து ஹீரோயின்கள் நடனத்தை பற்றிக் கொள்வார்கள். சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் மூவரும் 5 ஹீரோயின்களுக்கு முன்னால் நடனத்தில் டல் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு இந்த நடிகைகள் 5 அசத்தி விடுவார்கள். ஏன் சில நேரம் பிரபுதேவாவையே மிரளச் செய்துள்ளனர்.

தமன்னா: இயற்கையாகவே இவருக்கு நடனம் வரும் போல, அந்த அளவிற்கு ஆட்டத்தில் பட்டையை கிளப்பும் நடிகை. பெரிய அளவில் இவருக்கு ரிகர்சல் தேவைப்படாதாம். ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே கஷ்டமான ஸ்டெப்புகளை கூட சர்வசாதாரணமாக போட்டு விடுவாராம்.

சாய் பல்லவி: தனுசுடன் இவர் சேர்ந்து ஆடிய பாடல் “கோலிசோடா”. அந்தப் பாடலில் ஒரு சில சமயத்தில் தனுஷ் இவர் கூட ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் தனுஷும் நன்றாக டான்ஸ் ஆடிய கூடியவர் தான். சாய் பல்லவி நடிப்புக்கு முன் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த எம்பிபிஎஸ் டாக்டர்

சாய்ஷா: நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இவர் நடிப்பதில்லை. கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்திருந்தார். இவரும் நடனத்தில் பட்டையை கிளப்புவார்.

ஸ்ரீ லீலா: தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் எல்லா படங்களிலும் இவருக்கென்றே தனியாக ஒரு குத்தாட்டம் இருக்கும். எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் இவர். தமிழில் இப்பொழுது சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆட கூடிய திறமை கொண்டவர்.

பிரியங்கா அருள் மோகன்: சிவகார்த்திகேயன், தனுஷ் என மாறி மாறி நடித்து பல நடிகைகளை பின்னுக்கு தள்ளியவர் பிரியங்கா. இவரும் பல ஹீரோக்களை நடனத்தில் மிஞ்சி விடுவார். தற்போது பெரிய அளவில் படங்கள் இல்லாவிட்டாலும் கவினுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.