கடந்த 2022 ஆம் வருடத்தில் கோலிவுட் திரையுலகம் பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. அதிலும் சர்வதேச அளவில் புகழைத் தேடிக் கொடுத்த படங்களும் இருக்கிறது. ஆனால் முன்னணியில் இருக்கும் பல ஹீரோயின்களுக்கு கடந்த வருடம் சரியான ஆண்டாக அமையவில்லை. அந்த வகையில் 2022ல் படுதோல்வியை கொடுத்த ஐந்து ஹீரோயின்களை பற்றி இங்கு காண்போம்.
கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி ஹீரோயினாக ஒரு ரவுண்டு வந்த கீர்த்தி சுரேஷுக்கு சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த சாணிக்காகிதம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஓடிடி தளத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
நயன்தாரா கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல இரண்டு காதல், காட் பாதர் ஆகிய படங்கள் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. ஆனால் இவர் சோலோ ஹீரோயினாக நடித்த O2, கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியை அடைந்தது. அதேபோன்று இரண்டு வருடங்கள் கழித்து மலையாளத்தில் இவர் நடித்திருந்த கோல்டு திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில் நயன்தாராவுக்கு கடந்த வருடம் சிறப்பான ஆண்டாக அமையவில்லை.
பூஜா ஹெக்டே கடந்த வருடம் இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அப்படம் வரவேற்பை பெறவில்லை. அதேபோன்று தெலுங்கில் இவர் நடித்திருந்த ராதே ஷ்யாம், ஆச்சார்யா, ஹிந்தி படமான சர்க்கஸ் ஆகியவை படு தோல்வியை சந்தித்தது. இதனால் இவர் ராசி இல்லாத நடிகை என தற்போது முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
சாய் பல்லவி நல்ல திறமையான நடிகையாக இருக்கும் இவர் கடந்த வருடம் பெரிய அளவில் வெற்றி திரைப்படங்களை கொடுக்கவில்லை. இவர் கதையின் நாயகியாக நடித்த கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சறுக்களை சந்தித்தது. அதேபோன்று இவர் தெலுங்கில் நடித்த திரைப்படமும் நஷ்டம் அடைந்தது.
கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணியாக இருக்கும் இவர் தாக்கட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. பொதுவாக சோலோ ஹீரோயின் கதைகளை அதிகமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் அந்த படத்தில் கடும் உழைப்பை கொடுத்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட 85 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் மூன்று கோடி கூட வசூலிக்கவில்லை என்பதுதான் சோகம். அந்த வகையில் கடந்த வருடம் கங்கானாவுக்கு மோசமான வருடமாக அமைந்துவிட்டது.