ஹீரோக்களுக்கு நிகரா சிக்ஸ் பேக் வைத்த 5 ஹீரோயின்கள்.. ஐந்தே அடி உயரத்தில் சமந்தா வைத்திருக்கும் அஃப்ஸ்

சமந்தா: பார்ப்பதற்கு சமந்தாஐந்து அடி இருந்தாலும் பிட்னஸில் பயங்கரமான ஆளாம் . தினமும் 4 முதல் 6 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறார். பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததும் ஜிம் மாஸ்டரிடம் அடம் பிடித்து பிடித்து சிக்ஸ் பேக் வேண்டுமென இப்படி வொர்க் அவுட்டில் இறங்கிவிட்டார். இப்பொழுது சிக்ஸ் பேக் அஃப்ஸ்ஸோடு சுற்றி வருகிறார் அம்மணி.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் நான் எதற்கும் சளைத்தவர் இல்லை என பிட்னஸ் ப்ரீக்காகவும்காகவும் சுற்றி வருகிறார் நயன். விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்திற்காக இவர் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் ஒர்க் அவுட் செய்தாராம். அந்த பட காலகட்டத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் நயன்தாரா.

டாப்ஸி: பார்ப்பதற்கு க்யூட் டால் போல இருந்தாலும் அம்மணி கொஞ்சம் போல்டு தானாம். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் தமிழில் அறிமுகமானார் டாப்ஸி. இப்பொழுது பாலிவுட் குயின்னாக மாறிவிட்டார். அங்கே உள்ள ஹீரோக்களுக்கு பாடி பில்டிங்கில் செம டஃப் கொடுக்கிறார்.

சாக்ஷி அகர்வால்: அரண்மனை 3, பெஸ்டி, ஃபயர் போன்ற படங்களில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். பிக் பாஸில் மூன்றாவது சீசனில் பங்கு பெற்ற இவர் ஒரு பிட்னஸ் பைத்தியம். தினமும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் இவரும் சிக்ஸ் பேக்கோடு தான் சுற்றி வருகிறார்.

திசா பதானி: கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் திசா பதானி. ஏற்கனவே இவர் பாலிவுட்டில் பல ஆக்சன் படங்களில் நடித்துள்ளார். இதனாலேயே இவருக்கு உடம்பை ஃபிட்னஸ் ஆக வைத்துக் கொள்வதில் அலாதிய பிரியமாம். இவரும் ஹீரோக்களுக்கு நிகராக சிக்ஸ் பேக் உடம்போடு தான் சுற்றி வருகிறார்.