Rajini : பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக கூலி படத்தில் சில பகுதிகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த காட்சிகள் பிரமிக்க வைக்கும் படி எடுக்கப்பட்டுள்ளதாம். ஆகையால் இது ஒரு புதுவிதமான அனுபவத்தை கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொடுக்கும்.
அடுத்ததாக லோகேஷ் மற்றும் ரஜினி இருவரும் முதன்முறையாக கூட்டணி போட்டிருக்கின்றனர். ஒரு கமர்ஷியல் ஆன ஹிட் படத்தை இவர்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினியின் 50 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் படமாக கூலி படம் உள்ளது.
கூலி படத்தை பார்க்க முக்கியமான 5 காரணங்கள்
ஒரு ஆக்சன் திரில்லர் படத்தில் ரஜினியை மீண்டும் பார்ப்பதே ரசிகர்களுக்கு உற்சாகம் தான். அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட், ரஜினியின் தோற்றம், அதிரடியான ஆக்சன் காட்சிகள் என ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்படி பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.
அடுத்ததாக சொல்ல வேண்டும் என்றால் நட்சத்திர பட்டாளம் தான். ரஜினி என்ற மாஸ் நடிகரை தாண்டி நாகர்ஜுனா எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதோடு முதல் முறையாக அமீர்கான் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
38 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் சத்யராஜ் இணைந்து இருக்கின்றனர். மிஸ்டர் பரத் படத்தில் இவர்களது காம்பினேஷன் அட்டகாசமாக அமைந்திருந்தது. மேலும் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சோபின் போன்ற நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.
அடுத்ததாக இதுவரை எந்த படங்களுக்கு இல்லாத அளவுக்கு ப்ரீ புக்கிங் சேல்ஸ் ஆகி இருக்கிறது. இதுவரை முன்பதிவு மட்டுமே கிட்டதட்ட 60 கோடியை தாண்டி விட்டதாம். குறிப்பாக பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கின்றனர்.
மேலும் ரஜினியின் கூலி படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கான பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. ஆகையால் கூலி படத்தை தியேட்டரில் பார்க்க தவறவிட்டு விடாதீர்கள்.