காலத்தில் சூழ்ச்சியால் காணாமல் போன 5 நட்சத்திரங்கள்.. சொல் புத்தி இல்லாமல் மார்க்கெட்டை இழந்த ஜீன்ஸ் ஹீரோ

Film Journey of 5 Tamil celebrities failed in tamil cinema: காலத்தின் சூழ்ச்சியால் திரையில் நன்றாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் திடீரென காணாமல் போவதுண்டு. மறதி தேசிய வியாதி என்பது போல் ரசிகர்களும் அவர்களை நினைத்து வருத்தப்பட்டு கடந்தும் போய்விடுகிறார்கள் என்பதே சோகமான ஒன்று. அப்படிப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்து விழ்ந்த 5 நடிகர்களை காணலாம்.

தியாகராஜ பாகவதர்: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்,  மூன்று தீபாவளிகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே தமிழ் படம்  என்ற பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் தியாகராஜ பாகவதர். காலம் செய்த சூழ்ச்சியால் பத்திரிக்கையாளர் ஒருவரின் கொலை வழக்கில் கைதாகி தன் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வாழ வழி அற்று தான் நேசித்த சினிமாவை வெறுத்து ஒதுக்கி வீழ்ந்தார் தியாகராஜ பாகவதர்.

நடிகை சாவித்திரி: கண்ணதாசன் எழுதிய “ஆயிரத்தில் நீ ஒருத்தியம்மா” என்ற பாடல் சாவித்திரியை மனதில் வைத்தே எழுதப்பட்டதாம். இந்திய மொழிகள் பலவற்றிலும் சுமார் 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்  நடிகை சாவித்திரி. இயக்குனர்,தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டு திகழ்ந்த சாவித்திரி அம்மா அவர்கள், சொந்த படங்கள் தயாரித்ததால் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் தீராத மது பழக்கத்தாலும் தன் புகழை இழந்து நோய் வாய்ப்பட்டு அடையாளம் தெரியாமல் போனார்.

மைக் மோகன்: ரஜினி கமலுக்கு பின் 80’ஸ் ல் மென்மையான காதலுடன்  கவர்ந்திழுக்கும் உடல் மொழியால் பெண் ரசிகைகளை அதிகம் கொண்டிருந்தவர் நடிகர் மைக் மோகன். இவருக்கு குரல் கொடுக்கும் பின்னணிக் கலைஞர் சுரேந்திரன் இவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் உண்டான கருத்து வேறுபாடு, சிறந்த திரைக்கதையுடன் உள்ள படங்களை தேர்வு செய்யாமல் போனது, போன்ற பல்வேறு காரணிகளால் மைக் மோகன் திடீரென  திரைத்துறையில் இருந்து காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது விஜய்யின் G.O.A.T படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் மைக் மோகன்.

பிரசாந்த்: 90’ஸ் இளசுகளின் பேவரைட் நடிகர் பிரசாந்த். தன்னுடைய அப்பா தியாகராஜனால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு அவருடைய வழிகாட்டுதலாலேயே காணாமல் போகவும் செய்தார் பிரசாந்த். அடிக்கடி வெளிநாடு சென்று நடிகைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தும் பிரசாந்த், அதே கவனத்தை படத்திலும் கொஞ்சம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இடையிடையே தெலுங்கு படங்களில் தலைகாட்டிய பிரசாந்த் தற்போது விஜய்யின் G.O.A.T படத்தில் மறுப்பிரவேசம் செய்கிறார்.

ராமராஜன்: தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் வெறும் டவுசர் மட்டுமே போட்டு  கிராமத்து கதையை அடிப்படையாகக் கொண்ட படங்களைவெற்றி பெறச் செய்தவர் ராமராஜன். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து, வந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு அரசியலும் இறங்கி ஜொலிக்காமல் போனார் ராமராஜன்.