5 Tamil films lined up for re-release: தமிழில் தயாராகி பல படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்க முன்னணி நடிகர்களின் வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள் ரீ ரீலீஸ் ஆகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
ரீ ரீலிசுக்கு வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள் இதோ,
நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் டிஜிட்டலில் மெருகேற்றபட்டு, சென்ற ஆண்டு கமலின் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் ஆனது. அதே போல் இந்த ஆண்டும் கமலின் பிறந்தநாள் அன்று, இதனை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
மின்சார கனவு: ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமானின் இசையில் தெறிக்க விட்ட மின்சார கனவு திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. பிரபுதேவா,அரவிந்த்சாமி மற்றும் கஜோல் நடித்த இத்திரைப்படம் முக்கோண காதல் கதையை கருவாகக் கொண்டது.
இன்று வரை மேடை நிகழ்ச்சிகளில் இத்திரைப்படத்தின் பாடலை பாடி கொண்டாடும் ரசிகர்கள், மீண்டும் இதனை திரையில் காண ஆவலாக உள்ளனர்.
கில்லியை தொடர்ந்து ரீலீஸ் ஆக உள்ள விஜய்யின் இரண்டு படங்கள்
சச்சின்: சமீபத்தில் தமிழகம் எங்கும் வெளியான விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் வசூலில் பட்டையை கிளப்பி மாபெரும் சாதனை புரிந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
குஷி: எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடித்த குஷி திரைப்படம் 2௦௦௦ ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இதில் சொல்லிக் கொள்ளும்படி கதை எதுவும் இல்லை, ஆனாலும் விஜய் நடிப்பிற்காகவே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த குஷி திரைப்படத்தை, விஜய்யின் பிறந்த நாளுக்கு ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர் படக் குழுவினர்.
பருத்திவீரன்: 2007 ஆம் ஆண்டு அமிர் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் திரைப்படம் பருத்திவீரன். இத்திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.
கதை மற்றும் காட்சியமைப்பிற்க்காக மாபெரும் வெற்றி பெற்றது இத்திரைப்படம். பல பிரச்சனைகளால் அல்லாடி வரும் அமீருக்கு பருத்திவீரன் ரீ ரிலீஸ் சற்று ஆறுதலை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.