ஒரே இரவை கொண்ட 5 திரில்லர் படங்கள்.. மிரட்டி வரும் சிபிராஜ்

Sibiraj : சமீபகாலமாக ஒரே இரவில் நடக்கும் கதைகளை வைத்து வெளியாகும் திரில்லர் படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. அவ்வாறு சமீபத்தில் ஓடிடியில் வெளியான 10 ஹவர்ஸ் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள இந்த 10 ஹவர்ஸ் படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளுடன் படம் நகருகிறது. இதேபோல் ஒரே இரவில் கதைகளம் கொண்ட நான்கு படங்கள் இதற்கு முன்னதாக வெற்றி கொண்டிருக்கிறது.

லோகேஷ், கார்த்தி கூட்டணியில் உருவான கைதி படமும் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் லோகேஷ் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரே இரவை கொண்ட 5 திரில்லர் படங்கள்

அடுத்ததாக கிச்சா சுதீப் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது மேக்ஸ். கன்னட மொழியில் வெளியான இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத்தொடர்ந்து ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்தது பிளாக்.

அடுத்த அடுத்த காட்சிகள் பயத்தில் ஆழ்த்தும்படி கதைகளம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வீரதீர சூரன் படம் வெளியாகி இருந்தது. அருண்குமார் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படமும் ஒரே நாளில் உருவான கதை களம் தான்.

முதலில் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் முதல் பாகம் அடுத்ததாக எடுக்க உள்ளனர். இவ்வாறு த்ரில்லர் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுவதால் பெரும்பாலான இயக்குனர்கள் இதே போன்ற கதை களத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.