Actor Rajinikanth: பொதுவாக சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளி வருகிறது என்றால் அது சம்பந்தமான பல வேலைகளை தனிப்பட்ட முறையில் செய்து வருவார்கள். அந்த வகையில் ரசிகர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவது, அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து பெரிய விருந்தை ஏற்பாடு செய்வது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி ரொம்பவே கஞ்சத்தனம் பார்ப்பார் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.
அதாவது கறி விருந்து விஷயத்தில் ரஜினி எப்போதுமே பின்னாடி தான் இருக்கிறார். அதுவும் ரசிகர்களுக்கு சாப்பாடு போடுகிற விஷயத்தில் ரொம்பவே பிசுநாரித்தனமாக நடந்து கொள்வார். ஏற்கனவே இவருடைய இரண்டு மகள் திருமணத்தின் போது இவர் கூறியது, எல்லா ரசிகர்களுக்கும் சாப்பாடு கொடுப்பது சாத்தியமாகாது.
அதனால் குறிப்பிட்ட ரசிகர்களை அழைத்து என்னுடைய மண்டபத்தில் பெரிய கறி விருந்து கொடுப்பேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் இன்னும் வரை அந்த பேச்சு காற்றோடு பறந்து போய்விட்டது. இவர் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகி பேரன்கள் பெரிதாக வளர்ந்து விட்டார்கள். இன்னும் சொல்ல போனால் கல்யாணமான அந்த பொண்ணு, புருஷனை வேண்டாம் என்று டைவர்ஸ்கே போய்விட்டது.
ஆனால் இன்னும் வரை விருந்து மட்டும் கொடுத்த பாடாக இல்லை. அப்படிப்பட்ட இவர் படம் வெற்றியானதற்கு மட்டும் கொடுத்திடவா போறாரு. அந்த வகையில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகியும் ரசிகர்களுக்கு சாப்பாடு போடவில்லை. இவரை கம்பேர் பண்றதுக்கு மற்ற நடிகர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
என்னதான் 500 கோடி வசூல் செய்திருந்தாலும் காசு விஷயத்தில் கஞ்சத்தனமாக தான் ரஜினி இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் கறி சோறு போடுவதில் ஏமாற்றிக் கொண்டே வருகிறார். இந்த விஷயத்தில் எப்போதுமே இவர் ஒரு ஸ்டேப் பின்னுக்கு தான் இருக்கிறார்.
குறைந்தபட்சம் இவர் நடிக்கும் போது படக் குழுவில் உள்ளவர்களுக்காவது ஒரு சிறிய விருந்தை கொடுத்தால் ஆவது அவர்கள் மன நிறைவுடன் இருப்பார்கள். ஆனால் அதை இன்னும் வரை ரஜினி செய்யாமல் இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் போட்டு உடைத்து இருக்கிறார்.