பிறமொழி ஹீரோக்களை காலி பண்ணிய 6 தமிழ் இயக்குனர்கள்.. சல்மான் கானுக்கு படுதோல்வி கொடுத்த முருகதாஸ்

AR Murugadoss: லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இளம் இயக்குனர்கள் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களை எடுத்து வருகின்றனர்.

இதனால் முன்பு பெரிய இயக்குனர்களாக பார்க்கப்பட்ட தமிழ் இயக்குனர்கள் அக்கட தேசம் மொழி ஹீரோக்களின் படங்களை எடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த படங்கள் எதிர்பாராத விதமாக படு தோல்வியை சந்தித்து உள்ளது.

அவ்வாறு பிறமொழி ஹீரோக்களுக்கு தோல்வி கொடுத்த தமிழ் இயக்குனர்களை பார்க்கலாம். கோலி சோடா, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் தான் விஜய் மிட்டன். இவர் சிவராஜ் குமாரை வைத்து இயக்கிய பைரவி படம் மோசமான தோல்வி அடைந்தது.

பிறமொழி ஹீரோக்களை காலி பண்ணிய 6 தமிழ் இயக்குனர்கள்

அடுத்ததாக விஜய்யின் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை எடுத்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

அடுத்ததாக லிங்குசாமி ராம் பொத்தினேனியை வைத்து இயக்கிய படம் தான் தி வாரியர். பல வருடங்கள் பிறகு ரீ என்ட்ரி கொடுக்க நினைத்த லிங்குசாமிக்கு இது பிளாப்பில் தான் முடிந்தது.

மம்முட்டியை வைத்து டாமினிக் என்று கௌதம் மேனன் எடுத்த படமும் தோல்வியை சந்தித்தது. பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்திருந்தார்.

இந்த படமும் படுமோசமான தோல்வியை சந்தித்து ராம்சரணின் கேரியரில் பெரிய அடியை கொடுத்தது. அடுத்ததாக முருகதாஸ் பாலிவுட்டில் சிக்கந்தர் படத்தை எடுத்திருந்தார். சல்மான் கானுக்கு இது படுதோல்வியை கொடுத்திருக்கிறது.

1 thought on “பிறமொழி ஹீரோக்களை காலி பண்ணிய 6 தமிழ் இயக்குனர்கள்.. சல்மான் கானுக்கு படுதோல்வி கொடுத்த முருகதாஸ்”

Leave a Comment